Arulvakku

28.02.2019 — Making choices towards eternity

*7th Week in Ord. Time, Thursday – 28th February 2019 — Gospel: Mark 9,41-50*
*Making choices towards eternity *
Jesus uses graphic hyperbole in his teaching method. He exhorts his disciples to radically remove any sinful temptations and selfish attachments that endanger our eternal destiny. He asks them to become aware of their selfish desires of greed, pride and lust that keep them away from spreading the kingdom of God. Each of his sayings contrast the two possible destinies resulting from God’s final judgement: the kingdom of God or the fires of hell. In the age to come, we will all fully enter the eternity we have chosen for ourselves. Jesus depicts hell using the words from the last verse of Isaiah, which describe those who rebel against God: “for their worm shall not die, their fire shall not be quenched, and they shall be an abhorrence to all flesh” (Isa 66,24). These images describe in figurative language the anguish of eternal separation from God. With every decision and action over the course of our lifetime we orient ourselves either to heaven or hell, eternal life with God or eternal alienation from him, and at death we embrace what has truly become our choice.
இயேசு தம் போதனையில் உருவக மிகைப்படுத்துதலை பயன்படுத்துகின்றார். நிலைவாழ்வின் நிறைவுக்கு ஏற்படும் ஆபத்துக்களான பாவத்திற்கு இட்டுச் செல்லும் சோதனைகளையும் சுயநலப் பிணைப்புகளையும் முழுமையாய் அகற்றிட தம்முடைய சீடர்களுக்கு ஊக்கமளிக்கின்றார். இறையாட்சியை பரப்பத் தடையாய் இருக்கும் பேராசையையும், இறுமாப்பையும், மோகத்தினையும் அடிப்படையாகக் கொண்ட அவர்களின் சுயநல ஆசைகள் பற்றி விழிப்புணர்வு கொள்ள அழைப்பு விடுக்கின்றார். அவரின் ஒவ்வொரு கூற்றுகளும் கடவுளின் இறுதி நியாயத் தீர்ப்பினால் விளையும் இரண்டு சாத்தியமான முடிவுகளுக்கு முரணானது: கடவுளின் இறையாட்சி அல்லது நரக நெருப்பு. வரவிருக்கும் இறுதிக்காலத்தில், நாமே தேர்ந்தெடுத்த நிறைவாழ்வுக்குள் முழுமையாக நுழைவோம். நரகம் பற்றியும் கடவுளை எதிர்ப்பவர்களைப் பற்றியும் இயேசு வர்ணிப்பது எசாயாவின் நூலில் ஏற்கனவே குறிக்கப்பட்டுள்ளது: “அவர்களை அரிக்கும் புழு சாவதில்லை; அவர்களை எரிக்கும் நெருப்பு அணைந்து போவதில்லை; மானிடர் யாவருக்கும் அவர்கள் ஓர் அருவருப்பாக இருப்பார்கள்.” கடவுளிடமிருந்து நிரந்தமாய் பிரிந்திருக்கும் வேதனையை இவ்வுருவகங்கள் அடையாள மொழியில் விவரிக்கின்றன. நம்முடைய வாழ்வின் போக்கில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் செயலுக்கும் நாம் விண்ணகத்தையோ அல்லது நரகத்தையோ அணைத்துக் கொள்கிறோம். அதாவது, கடவுளோடு நித்திய வாழ்வு அல்லது அவரிடமிருந்து நித்திய விரோதத்தை நாம் நம்முடைய மரணத்தின் போது தேர்வு செய்கின்றோம்.