Arulvakku

03.05.2019 — Jesus is the access point to God’s promises

*Sts.Philip and James, 2nd week in Easter Time, Friday – 3rd May 2019 — Gospel: Jn 14,6-14 *
*Jesus is the access point to God’s promises *
There are seven “I AM” sayings in John’s Gospel (6,35; 8,12; 10,7; 10,11; 11,25; 14,6 and 15,1). Today’s passage deals with the sixth one “I am the Way, the Truth and the Life”. The ‘way’ denotes the lifestyle of the wise and the wicked in the Jewish tradition. In the Psalms, ‘way’ is used as a metaphor to describe a life lived either in accordance with the Law or the will of God. Jesus uses it as an expression of a faithful person’s union with God. But John’s gospel fashions the uniqueness of this word in two areas. Firstly, the combination of truth and life act as appositional, i.e., they explain the meaning in relation to ‘the way’. They clarify how and why Jesus is the ‘the way’, ‘the truth’ and ‘the life’. Secondly, the term ‘the way’ provides a focused attention and identification with the person of Jesus. For instance, in John 10, Jesus as ‘the gate’ and ‘the good shepherd’ reveals not two different entities. It projects Jesus simultaneously the entrance to truth and the embodiment of life. The reference of ‘I AM’ in this context relates to the latter’s meaning, that Jesus is the access point to God’s promise of life where one encounters the truth of God.
யோவானின் நற்செய்தியில் ஏழு “நானே” வார்த்தைகள் உள்ளன. இன்றைய பகுதியில் “ வழியும் உண்மையும் உயிரும் நானே” என்ற ஆறாவது வாக்கியம் அமைந்துள்ளது. யூத பாரம்பரியத்தில் ‘வழி’ என்பது ஞானிகள் மற்றம் பொல்லாதோரின் வாழ்வு நிலையை குறிக்கிறது. திருப்பாடல்களில் ‘வழி’ என்பது திருச்சட்டத்தின் படி அல்லது இறைத்திட்டத்தின் படி வாழ்வதை உருவகமாக விவரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதனை இறைவனோடு இணைக்கப்பட்டுள்ள நம்பிக்கையாளரின் வெளிப்பாடாக இயேசு பயன்படுத்துகிறார். ஆனால் யோவான் நற்செய்தி இவ்வார்த்தையின் தனிச்சிறப்பை இரண்டு அர்த்தத்தில் வெளிப்படுத்துகிறார். முதலாவதாக, உண்மையும் உயிரும் வழியோடு இணைந்தே அர்த்தம் பெறுகிறது. அதாவது இயேசு எப்படி? ஏன்? வழியாக, உண்மையாக, வாழ்வாக திகழ்கிறார் என்பதை தெளிவபடுத்துவது. இரண்டாவது, ‘வழி’ என்பது இயேசு என்ற நபருடன் தனிப்பட்ட கவனம் செலுத்துதல் மற்றும் அடையாளப்படுத்துதலைக் குறிக்கிறது. உதாரணமாக, யோவான் 10-ல் இயேசுவே “வாயில்” என்றும் “நல்ல ஆயன்” என்றும் இரண்டு வித்தியாசமான அடையாளங்களைக் காண்கிறோம். ஒன்றில் உண்மையின் நுழைவு வாயிலாகவும் மற்றொன்றில் வாழ்க்கை உருவகமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் கடவுளுடைய உண்மையை அறிந்து கொள்ளவும் வாக்குறுதியை வாழ்வாக்கவும் மையமாய் திகழும் இயேசுவே அணுகுவதற்கான வழி என்ற இரண்டாவது விளக்கத்தை இன்றைய “நானே” வாக்கியம் பெறுகிறது.