Arulvakku

20.05.2019 — Spirit of Fulfillment

*5th week in Easter Time, Monday – 20th May 2019 — Gospel: Jn 14,21-26*
*Spirit of Fulfillment *
By observing the commandments of Jesus we enter into the Trinitarian relationship. The Spirit is first of all a gift from God, but a gift that must be accepted through one’s loving, active response to God’s word. Since the Spirit of truth is the ongoing presence and revelation of God, it primarily does two things: to teach all things and to remind all that Jesus said. Though Jesus taught his followers many things throughout his public ministry, they were unable to understand the heart of his teaching. Therefore the assistance of the Spirit is needed not only to understand Jesus’ teachings but to deepen its mystery as well. In reminding Jesus’ sayings the Spirit also brings to remembrance what the believers have forgotten. Therefore the Spirit does not make revelations of new notions, but brings to fulfillment what has already been revealed and taught by Jesus.
இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாம் மூவொரு இறையுறவில் இணைகிறோம். முதன் முதலில் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட கொடை தூய ஆவியாகும். கடவுளின் வார்த்தைக்கு அன்பாகவும் செயல் வழியாகவும் பதில்மொழி அளிப்பதின் வழியாக இக்கொடையை பெற்றுக் கொள்கிறோம். உண்மையின் ஆவியானவர் கடவுளின் இயல்பாகவும் வெளிப்பாடாகவும் இருப்பதால், அவர் இரண்டு காரியங்களைச் செய்கிறார்: எல்லாவற்றையும் கற்பிப்பது மற்றும் இயேசு கற்பித்ததை நினைவு படுத்துவது. தம்மைப் பின்பற்றுவோர் எல்லோருக்கும் பல்வேறு காரியங்களை இயேசு தன்னுடைய பணிவாழ்வில் கற்பித்திருந்தாலும், அவரின் இன்றியமையாத போதனைகளை அவர்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆகையால் இயேசுவின் போதனைகளை உள்வாங்கவும் அம்மறையுண்மைகளை ஆழப்படுத்தவும் ஆவியாரின் உதவி தேவையாய் இருக்கிறது. இயேசுவின் வார்த்தைகளை ஆவியார் நினைவுபடுத்தும்போது, நம்பிக்கையாளர்கள் மறந்து போயிருந்ததையும் நினைவிற்கு கொண்டு வருகிறது. ஆகையால் தூய ஆவியானவர் புதிய கருத்துக்கள் எதையும் வெளிப்படுத்துவில்லை, மாறாக இயேசு ஏற்கனவே வெளிப்படுத்தியதையும் கற்பித்ததையும் நிறைவுக்கு கொண்டுவருகின்றார்.