Arulvakku

10.06.2019 — Called to be righteous

*10th Week in Ord. Time, Monday – 10th June 2019 — Gospel: Mt 5,1-12*
*Called to be Righteous *
Of all the teachings of Jesus, the Sermon on the Mount is probably the best known, but least understood and least followed. In this segment, the beatitudes are a collection of eight characteristics or qualities of life, that separate the children of God from the rest of the world (5,3-12). These eight beatitudes describe the blessed state of those who humbly submit themselves to the will of God and especially to possess the aspects of being in the kingdom. The first set of four beatitudes describes not personal qualities but oppressive situations of distress or bad fortune, which are honoured or esteemed because God’s reign reverses them. This reversal is underway in Jesus’ ministry, but is not yet complete. The remaining four, and the elaboration in vv.11-12, concern human actions which are honoured or esteemed because they express the qualities of God’s transforming reign. However both the sets close with reference to righteousness, which is the end goal for every Christian to enter into the kingdom (5,20). These are not eight different groups of people (poor, mourners, meek, etc.), but every Christian is meant to manifest every one of these characters.
இயேசுவின் அனைத்து போதனைகளிலும் தலைசிறந்தது என அறியப்பட்டது மலைப்பிரசங்கம் எனலாம். ஆனால் இதன் முழுவதையும் புரிந்து கொள்வதும் கடைபிடிப்பதும் மிகவும் கடினம். இந்த பிரிவில், பேறுபெற்றோரின் கூற்றுகள் எட்டு குணாதிசயங்கள் அல்லது வாழ்க்கைப் பண்புகளின் தொகுப்பாகும். இது கடவுளின் பிள்ளைகளை இவ்வுலகிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. இந்த எட்டு பேறுகள் கடவுளுடைய திருவுளத்திற்கு தாழ்மையோடு கீழ்ப்படிபவர்களின் ஆசிர்வதிக்கப்பட்ட நிலையை விவரிக்கின்றன. குறிப்பாக, இறையாட்சியில் பங்கு பெறுவதற்கான அம்சங்களை கொண்டுள்ளன. முதல் நான்கு பேறுகள் தனிப்பட்ட குணங்களை அல்ல; மாறாக ஒடுக்கப்பட்டவர்களின் துன்பகரமான சுழல்களை அல்லது துரதிஷ்டத்தை விவரிக்கின்றன. அவை கடவுளுடைய அரசில் ஏற்படும் தலைகீழ் மாற்றத்தினால் கிடைக்கும் மதிப்பு அல்லது கவுரவத்தை சுட்டிக் காட்டுகின்றன. இந்த தலைகீழ் மாற்றம் இயேசுவின் பணிக்காலத்தில் தொடர்ந்து நடைபெற்றாலும் நிறைவடையவில்லை. மீதமுள்ள நான்கு பேறுகளும் மனித செயல்பாட்டினால் விளையும் மதிப்பு அல்லது கவுரவத்தை குறிக்கின்றன. இது கடவுளரசில் ஏற்படும் உருமாற்றத்தின் பண்புகளை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் இவ்விரண்டு பகுதிகளும் நீதியை நிலைநாட்டும் வேட்கையுடன் முடிவு பெறுகிறது. இதுவே இறையாட்சியில் நுழைய விரும்பும் கிறிஸ்தவர்களின் இலக்காகும். இந்த எட்டு நபர்களும் வெவ்வேறு குழுக்களல்ல (ஏழையோர், துயருவோர், சாந்தமுள்ளோர் …) மாறாக, ஒவ்வொரு கிறிஸ்தவனும் தம்முடைய வாழ்வில் வெளிப்படுத்த வேண்டிய பண்புகளாகும்.