Arulvakku

15.06.2019 — Call to be truthful and faithful

*10th Week in Ord. Time, Saturday – 15th June 2019 — Gospel: Mt 5,33-37*
*Call to be truthful and faithful*
The positive focus of Jesus’ command on oath is that the disciples be honest and transparent in their relationships. Though the Torah forbids swearing an oath falsely; Jesus teaches that a disciple’s word alone ought to be reliable without being supported by an oath. Later Jesus criticizes the Pharisees in Mt 23,16-21 against a false justification that subtly distinguishes between binding and non-binding oaths. St.James gives a confirming proof to Jesus’ command, not to “swear at all” by emphasizing with additional phrases, “above all” at the beginning, “by any oath” in the middle, and warning of “condemnation” at the end (Jas 5,12-13). Jesus teaching is another version of Lev 19,12 and Ps 50,14 that do not require oaths but insist on truthfulness in oath taking and fidelity to the promises made. Certifying one’s word by appeal to heaven, earth, Jerusalem, or one’s head simply raises suspicion concerning the depth of one’s commitment to the truth and to promises. For Jesus, it is God’s will that men and women be absolutely truthful in their words and faithful to their commitments. Where such truthfulness and faithfulness are present, they cannot be enhanced by oaths of any sort.
ஆணையிடுவதை பற்றிய நேர்மறை கண்ணோட்டத்தில் தம்முடைய சீடர்கள் தங்கள் உறவுகளில் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்பதை இயேசு இங்கு எடுத்துக் கூறுகிறார். தோரா சட்டங்கள் தவறாக ஆணையிடுவதை தடைசெய்கிறது. எந்த ஆணையின் மீதும் சார்ந்திராமல் சீடர்களின் வார்த்தைகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்று இயேசு கற்பிக்கிறார். கட்டுப்படுத்தும் மற்றும் கட்டுப்படுத்தாத ஆணைகளின் வேறுபாடுகளுக்கு இடையில் தவறான நியாயத்தீர்ப்புக்கு எதிராக மத் 23,16-21ல் பரிசேயர்களை இயேசு விமர்சிக்கிறார். புனித யாக்கோபு, “எல்லாவற்றுக்கும் மேலாக” என்று தொடக்கத்திலும், “ஆணையை” பற்றி இடையிலும், “தண்டனை” என்ற எச்சரிக்கையை முடிவிலும் வலியுறுத்தி இயேசுவின் கட்டளைக்கு ஆதாரம் அளிக்கிறார். இயேசுவின் போதனை லேவி 19,12 மற்றும் திப 50,14ன் இன்னொரு பதிப்பாகும். இதில் ஆணையிடுதலில் உண்மைத்தன்மையும் வாக்குறுதிகளில் நம்பகத்தன்மையும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். விண்ணகத்தின் மேலும், மண்ணகத்தின் மேலும், எருசலேமின் மேலும், ஒருவருடைய தலையின் மேலும் வாக்குறுதி அளிப்பவர்; அவரின் வாய்மைக்கும் வாக்குறுதிக்கும் உள்ள உறுதிப்பாட்டைப் பற்றிய சந்தேகத்தை எழுப்புகிறது. இயேசுவைப் பொறுத்தவரை, ஆண்களும் பெண்களும் தங்கள் வார்த்தைகளில் உண்மையும், அர்ப்பணிப்பில் பற்றுறுதியும் கொண்டிருப்பதே இறைவனின் திட்டமாகும். அத்தகைய உண்மைத்தன்மையும் நம்பகத்தன்மையும் எங்கு உள்ளதோ, அங்கே எந்த ஆணையும் மேம்படுத்தத் தேவையில்லை.