*3rd Week in Ord. Time, Friday – 01st February 2019 — Gospel: Mark 4,26-34*
*Seeds grow without human intervention *
Jesus being a very good teacher used ordinary seed parables to make the people understand easily about what He spoke. He used the parable of the growing seed and the parable of the mustard seed. Both teachings concern the mystery of “the kingdom of God” (vv.26,30). Both these parables begin with the sowing of seed in the ground, and both describe the beginning and final stages of the process of growing seed. Parables are different: the first one focuses its attention on the interim stages of growth, whereas the second focuses on the final outcome. The parables emphasize the power and potency that is in the seed itself. The seed inevitably grows and matures independent of any action on the part of the farmer. Nothing is said of the many activities normally done by the farmer, like ploughing, tilling, watering, weeding and fertilizing. Jesus teaches that God’s reign is not a human achievement. It does not depend on the understanding or actions of his disciples. The parable encourages to continue sowing the gospel in the world, even when we don’t see many results.
இயேசு ஒரு நல்ல ஆசிரியராக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் சாதாரண விதை உவமைகளை தன் போதனையில் பயன்படுத்துகின்றார். அவர் வளர்ந்து வரும் விதை மற்றும் கடுகு விதை பற்றிய உவமைகளையே போதிக்கின்றார். இரண்டு போதனைகளும் “இறையாட்சியின் ” மறைபொருளை மையப்படுத்துகின்றன. இவ்விரண்டு உவமைகளும் தரையில் விதைக்கும் நிலையிலிருந்து தொடங்குகின்றன. இரண்டு உவமைகளும் விதைகளின் தொடக்க மற்றும் இறுதிக் கட்டங்களை விவரிக்கின்றன. இவ்வுவமைகளின் வித்தியாசம் என்னவென்றால் – முதலாவது உவமை, விதையின் இடைக்கால வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்றது; இரண்டாவது, இறுதி விளைவில் கவனம் செலுத்துகின்றது. இவ்வுவமைகள் விதைகளில் இருக்கும் வீரியத்தையும் சக்தியையும் வலியுறுத்துகின்றன. விதையும் விதைப்பவரின் எந்த நடவடிக்கையும் இல்லாமல் வளர்ந்து முதிர்ச்சியடைகிறது. இவ்வுவமையில் நிலத்தை பண்படுத்துவது, நீர் பாய்ச்சுவது, களை எடுப்பது, மற்றும் மருந்து அடிப்பது போன்ற விதைப்பவர் செய்யும் அன்றாட நடவடிக்கைகள் குறித்து எதுவும் கூறப்படவில்லை. இறையாட்சியின் வளர்ச்சி ஒரு மனித உருவாக்கமல்ல என்பதையே இயேசு இங்கு போதிக்கின்றார். அவருடைய சீடர்களின் செயல்கள் அல்லது புரிதலில் நம்பிக்கை வைக்கவில்லை. இவ்வுவமைகள் எந்தவொரு பலனையும் எதிர்பாராமல் இவ்வுலகில் தொடர்ந்து நற்செய்தியை விதைத்துக் கொண்டே செயல்பட உற்சாகப்படுத்துகின்றன.