Arulvakku

07.10.2019 — Self-Justified Lawyer

27th Week in Ord. Time, Monday – 7th October 2019 — Gospel: Lk 10,25-37

Self-Justified Lawyer

The Jewish teacher of the law seems to have thought that his attitude to God was blameless and he was certain in his Scriptural knowledge. As a Jew, he had the notion that he belonged to the chosen people and he had to show neighbourliness only to those of his own. In this way, the lawyer self-justified himself. Jesus, in his response, appears to show that the question “Who is my neighbour?” is completely wrong. The proper question to ask should be “To whom can I be a neighbour?” Jesus takes the whole question out of the theoretical context and places it in a more specific real-life situation. By putting the rhetorical question at the end of the parable, Jesus encourages the lawyer to re-evaluate himself and live within the requirements of the law as well as supersede the law when required to save human life. To go and do like the Samaritan meant removing the obstacles that was in between the Jews and Samaritans to reach out those in need.

யூத திருச்சட்ட அறிஞர், கடவுள் பற்றிய அணுகுமுறையில் நேர்மையாகவும் மறைநூல் அறிவில் உறுதியாகவும் இருந்தார் என்று நினைத்ததாகத் தெரிகிறது. யூதரான அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே சொந்தமானவர் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். மேலும் அவர் தனது சொந்தங்களுக்கு மட்டுமே அடுத்திருப்பவர்க்கு காட்ட வேண்டிய அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று நம்பியிருந்தார். இவ்வாறு திருச்சட்ட அறிஞர் தன்னை நியாயப்படுத்திக் கொண்டார். இயேசு தனது பதிலில், “எனக்கு அடுத்திருப்பவர் யார்?” என்ற கேள்வி முற்றிலும் தவறானது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். மாறாக அவர் கேட்டிருக்க வேண்டிய சரியான கேள்வி “யாருக்கு நான் அடுத்திருப்பவராக இருக்க வேண்டும்?” இயேசு முழு கேள்வியையும் தத்துவார்ந்த சூழலில் இருந்து பெயர்த்தெடுத்து ஒரு குறிப்பிட்ட நடைமுறை வாழ்க்கை சூழ்நிலையில் வடிவமைக்கின்றார். சிந்தனையை தூண்டிவிடும் கேள்வியை உவமையின் முடிவில் வைப்பதன் மூலம், திருச்சட்ட அறிஞர் தன்னை மறு மதிப்பீடு செய்து சட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப வாழவும், மனித உயிரைக் காப்பாற்றத் தேவைப்படும்போது சட்டத்தை மீறவும் அவரை ஊக்குவிக்கின்றார் இயேசு. சமாரியனைப் போல செயல்படுவது என்பது யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையில் இருந்த தடைகளை நீக்கி தேவையில் இருப்போரை சென்றடைவதாகும்.