*3rd Ordinary Sunday – 27th January 2019 — Gospel: Luke 1,1-4; 4,14-21*
*Preferential option for the clients*
Analyzing the manifesto of Jesus in the light of the first century Mediterranean social values, there emerges the patron-client relationship model. This is a socially fixed relation binding person of unequal status and power, creating dependency of inferior have-not’s (called a client) with superior have’s (called a patron). Rome with its patronage was an oppressive system. Its clients the lame, poor, captives, blind, and oppressed had no capacity whatsoever to change this system. In this scenario, Jesus might have felt the social, cultural, economic, religious and political hardships of that society. And this compelled him to stand in solidary with the less privileged. Therefore the centre of Jesus’ homily in the synagogue was patronage. The patronage that Jesus claimed to initiate was different from the Roman Empire. In Jesus’ patronage model there is no notion of “reciprocity”, i.e., paying back, which was integral part in first-century Mediterranean society. He presents himself as a broker or mediator of God’s patronage, who proceeds to broker the favour of God through the Spirit of God. Through Jesus God’s patronage offers holistic well-being and freedom to all human beings.
முதல் நூற்றாண்டின் மத்தியதர வர்க்க சமூக அமைப்புகளின் வெளிச்சத்தில் இயேசுவினுடைய அறிக்கையை ஆராய்ந்தால், அதிகாரத்தினர்-அடித்தட்டு வர்க்கத்தினர் என்ற உறவுநிலையை காணலாம். இது ஒரு சமநிலையற்ற மற்றும் சார்புநிலையை உருவாக்கும் சமூக நிலையின் உறவுப் பிணப்பாகும். இருப்பவர்-இல்லாதவர், உயர்ந்தோர்-தாழ்ந்தோர் என்ற ஏற்றத்தாழ்வு நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. இதில் உரோமை அரசு அதிகாரத்தைக் கைக்கொண்ட ஒரு அடக்கு முறையாக திகழ்ந்தது. அதன் அடித்தட்டு மக்களான நலிந்த, ஏழைகள், பார்வையற்றோர், சிறைப்பட்டோர், மற்றும் ஓடுக்கப்பட்டோர் இந்த அமைப்பு முறையை மாற்றியமைக்கும் திறனை கொண்டிருக்கவில்லை. இச்சூழலில், அச்சமுதாயத்தின் சமூக, கலாச்சார, பொருளாதார, மத மற்றும் அரசியல் ஒடுக்குமுறையை இயேசு உணர்ந்திருக்கலாம். இதனால் வலுவிழந்தோர் பக்கம் தம்முடைய நிலைப்பாட்டை எடுத்து அதை எல்லோர் முன்பாகவும் தொழுகைக் கூடத்தில் அறிக்கையிடுகின்றார். இயேசு வெளிப்படுத்த விரும்பிய அதிகாரத்தன்மை உரோமை அரசின் அதிகாரத் தன்மையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. காரணம், இயேசுவின் சார்புத்தன்மையில் பரஸ்பர மாற்றம் இல்லை, அதாவது உயர்நிலையிலிருந்து பெற்றால் தாழ்நிலையில் உள்ளோர் திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை. இச்சூழலில் இயேசு தூய ஆவியின் உந்துதலால் இறைத்தந்தையின் இடைநிலையாளராக தன்னையே அர்ப்பணிக்கின்றார். கடவுள் மையம் கொண்ட சார்ப்புத்தன்மை இயேசுவின் மூலம் எல்லா மனிதர்களுக்கும் முழுமையான வாழ்வையும் சுதந்திரத்தையும் வழங்குகின்றது.