Arulvakku

06.02.2019 — Development in Sabbath Controversy

*4th Week in Ord. Time, Wednesday – 06th February 2019 — Gospel: Mark 6,1-6*
*Development in Sabbath Controversy *
In Mark’s Gospel, the Sabbath is one of the main areas of conflict between Jesus and his opponents. Although the word appears twelve times in five events of the gospel, the usage in this context (6,2) doesn’t explicitly involve in disputes about the Sabbath law. The Sabbath is mentioned here based on the social customs of healing: Jesus performs mighty works (6,2), and laid his hands on few sick people and cured them (6,5b). Jesus’ teaching in the synagogue on the Sabbath in 6,1-6 is a reiteration of 1,22-28, which is the initial progression for the Sabbath controversy. In both there are many parallel key words: “the Sabbath” (6,2a and 1,21b); “the synagogue” (6,2a and 1,21b); “they” who take offence at Jesus (6,3c), this metaphor of opponents is identified with “the scribe” who is one of Jesus’ opponents (1,22b); healing stated as “cured them” (6,5b) and “they obey him” (1,27c). Right at the starting of the narrative the people who heard his teaching were astonished (6,2; 1,22). However, the pericope (6,1-6) in which Jesus is rejected by the town people, is distinct from 1,22-28 in that Jesus begins his ministry of the Sabbath. For at the end of the narrative, the positive amazement of the people on the authority of Jesus at the beginning of his ministry leads to questions of wonder and lets his fame spread in the air (1,27-28). On the contrary, the four questions of people on Jesus’ identity and authority leads to their rejection which culminates in Jesus amazement of their unbelief (6,6) curtailing his power. Jesus being rejected at this stage is a progressive development of the Markan conflict narrative.
மாற்கு நற்செய்தியில், இயேசுவிற்கும் அவருடைய எதிரிகளுக்கும் இடையே ஓய்வுநாளில் மோதல்கள் ஏற்படுவது வழக்கம். இந்நற்செய்தியின் ஐந்து நிகழ்வுகளில் பன்னிரெண்டு முறை இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய பகுதியில் இடம்பெறும் ஓய்வுநாள் என்ற வார்த்தை ஓய்வுநாளுக்குரிய சர்ச்சையை முன்வைக்கவில்லை. மாறாக, ஒய்வுநாளில் இடம்பெற வேண்டிய சமூக பழக்கவழக்கமான குணமளித்தலை குறிக்கின்றது: இயேசு வல்ல செயல்களைச் செய்தார் (6,2) மற்றும் உடல் நலமற்றோர் சிலர் மேல் கைகளை வைத்துக் குணமாக்கினார் (6,5). ஓய்வுநாளில் இயேசு தொழுகைக் கூடத்தில் கற்பித்த வர்ணனை (6>1-6) முதல் அதிகாரத்தில் ஓய்வுநாளைப் பற்றிய சர்ச்சையை தொடங்கும் நிகழ்வோடு (1>21-28) ஒத்ததாய் அமைந்துள்ளது. இவ்விரண்டு வர்ணனைகளிலும் முக்கியமான வார்த்தைத் தொடர்புகள் பல உண்டு: ஓய்வுநாள், தொழுகைக்கூடம், இயேசுவின் எதிரிகள், மற்றும் குணம்பெற்றார்கள். இவ்விரண்டு பகுதிகளின் வர்ணனை துவக்கத்தில் மக்கள் அவருடைய போதனைகளைக் கேட்டு ஆச்சரியமடைந்தனர் என்றே தொடங்குகின்றது (6>2; 1>22). இருப்பினும் இயேசு மக்களால் நிராகரிக்கப்பட்ட இப்பகுதி (6>1-6) அவருடைய பணிவாழ்வை துவங்கும் நிகழ்விலிருந்து (1>22-28) முற்றிலும் மாறுபட்டது. முதல் அதிகாரத்தின் வர்ணனை முடிவில் இயேசு தொடங்கிய பணியில் அவரது அதிகாரத்தைக் கண்டு மக்கள் ஆச்சரியமடைந்தனர். அதனால் வியத்தகு கேள்விகள் எழுந்தன, அவருடைய புகழ் காற்றில் பரவியது. மாறாக, இன்றையப் பகுதியில் இயேசுவின் அடையாளம் மற்றும் அதிகாரம் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. இதனால், நிராகரிக்கப்பட்ட இயேசு அவர்களின் நம்பிக்கையின்மையை கண்டு ஆச்சரியப்படுகின்றார், அவருடைய வல்ல செயல்கள் முடக்கப்பட்டது. இயேசு நிராகரிக்கப்படும் மாற்கு நற்செய்தியின் இப்பகுதி ஓய்வுநாள் மோதல்களை முன்னெடுத்துச் செல்லும் வளர்ச்சியாகும்.