Arulvakku

07.02.2019 — Paired for Common Mission

*4th Week in Ord. Time, Thursday – 07th February 2019 — Gospel: Mark 6,7-13*
*Paired for Common Mission *
When Jesus first appointed the twelve, he called them “to be with him” and “to be sent out” (3,14). Throughout his life, Jesus balanced these two dimensions of discipleship. Up until now, Jesus has lived with these twelve and taught them in word and deed about the reign of God. Now, for the first time, Jesus sends out his chosen band to proclaim the kingdom in word and deed. Jesus sends them out “two by two” for many reasons. The Old Testament required two witnesses to authenticate an eyewitness testimony. Companionship, communal prayer, moral support and mutual protection must have also played a role. The shared ministry of each pair reflects the communal goal of their mission. The early church did follow the same pattern after the resurrection, with Peter and John, Paul and Barnabas, and Priscilla and Aquila are those among the pairs. The mission of the twelve is essentially an extension of the mission of Jesus. They are sent even today to bring God’s truth and healing to those in need.
இயேசு முதல் முறை பன்னிருவரை நியமித்தபோது, அவர்கள் “தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும்” அழைத்தார். சீடத்துவத்தின் இவ்விரண்டு பரிமாணங்களையும் அவர் சமநிலைப்படுத்தி வாழ்ந்தார். இதுவரை இயேசு இந்த பன்னிருவரோடு வாழ்ந்து, இறையாட்சியைப் பற்றி சொல்லிலும் செயலிலும் போதித்து வந்தார். இப்போது, முதன்முறையாக இறையாட்சியை வார்த்தையாலும் செயலாலும் அறிவிக்க தாம் தேர்ந்து கொண்டோரை அனுப்புகிறார். பல்வேறு காரணங்களுக்காக இயேசு அவர்களை “ இரண்டு இரண்டு பேராக” அனுப்புகிறார். ஒரு சாட்சியை அங்கீகரிப்பதற்கு பழைய ஏற்பாட்டில் இரண்டு சாட்சிகள் தேவை. கூட்டுத்தோழமை, குழுச்செபம், அறநெறி ஆதரவு, மற்றும் பரஸ்பர பாதுகாப்பு என்ற கருத்துகளும் இடம் பெற்றிருக்க வேண்டும். பணியினை பகிரும் ஒவ்வொரு ஜோடியின் நோக்கமும் குழும இலட்சியத்தினை பிரதிபலிக்கிறது. இயேசுவின் உயிர்ப்பிற்கு பிறகு தொடக்க காலத்திருச்சபையிலும் அந்த மாதிரியைப் பின்பற்றியிருந்தனர். பேதுருவும் யோவானும், பவுலும் பர்னபாவும், பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் என்று இருவர் தோழமையில் பணி செய்தனர். பன்னிருவரின் பணியின் நோக்கமே இயேசுவின் பணியை நீட்டிப்பு செய்வதாகும். இறையுண்மையையும் சுகப்படுத்தலையும் மேற்கொள்ளும் பணியினை செய்ய இன்றும் சீடர்கள் அனுப்பப்படுகிறார்கள்.