Arulvakku

12.05.2019 — Recognizing the divine voice within

*4th Sunday of Easter – 12th May 2019 — Gospel: Jn 10,27-30 *
*Recognizing the divine voice within *
Jesus’ portrayal of his sheep is a description of authentic believers. Three pair of sentences (Jn 10,27-28), of which several parts express both the faith of the sheep and the goodness of the Shepherd, by means of correlatives. On the one side, each pair of clauses point out the progress of human act and state, i.e., metaphorically referring to the sheep. The clauses on the right side pours down the divine gift, i.e., the act or gift of the Shepherd. This ensures the believer spiritual blessings for every step taken to follow the divine voice. The pairs proceed in a climax from the first response of the conscience which recognizes the divine voice to the eternal home which is in the Father’s presence.
1) “My sheep hear my voice” … “and I know them”.
2) “And they follow me”… “and I give them eternal life”.
3) “And they shall never perish” … “no one will snatch them out of my hand.”
By reading each pair in the order of the text, we notice how at each stage the gift is proportioned to the faculty which can receive it (ear, feet, and body). True discipleship is a gift of recognizing the divine within you. It is recognizing the shepherd’s voice in one’s heart and being attuned to follow it. The end result is that the faith in Jesus, the Shepherd unites the believer not only to Jesus but also to his Father, who has the package of life security in the present and life eternal in the next.
இயேசு தம்முடைய உண்மையான நம்பிக்கையாளர்களை ஆடுகளாக சித்தரித்து விளக்குகின்றார். மூன்று சோடி வாக்கியங்களில் பல பகுதிகள் ஆடுகளின் நம்பிக்கையையும், மேய்ப்பரின் நற்குணத்தையும் தொடர்புடையதாக வெளிப்படுத்துகின்றன. ஒரு புறத்தில், ஒவ்வொரு சோடி பிரிவுகளும், மனித நடவடிக்கை மற்றும் இயல்பு நிலையின் முன்னேற்றத்தைச் சுட்டிக் காட்டுகின்றன; அதாவது இவற்றை ஆடுகளின் உருவகமாக குறிப்பிடுகிறார். வலது பக்கத்தில் உள்ள உட்பிரிவுகள் தெய்வீக கொடைகளை பொழிகின்றன; அதாவது மேய்ப்பனின் செயலாக அல்லது கொடையாக பெறுகிறோம். இதனால் தெய்வீக குரலைப் பின்பற்றும் நம்பிக்கையாளருக்கு ஆன்மீக ஆசிர்வாதங்கள் உறுதியளிக்கப்படுகின்றன. இந்த சோடி வாக்கியங்கள் தெய்வீக குரலை உணர்ந்து மனசாட்டியின் படி அதற்கான பதில் அளிப்பதில் தொடங்குகிறது. உச்சக்கட்டமாக, தந்தையின் உடனிருப்பில் வான் வீட்டில் இணைவதோடு நிறைவுபெறுகிறது.
1) “என் ஆடுகள் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றன” … “எனக்கும் அவற்றைத் தெரியும்”
2) “அவையும் என்னைப் பின்தொடர்கின்றன” … “நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன்”
3) “அவை என்றுமே அழியா” … “யாரும் பறித்துக்கொள்ள இயலாது” ஒவ்வொரு சோடியையும் வரிசை படி வாசிக்கும் போது, ஒவ்வொரு நிலையிலும் உடல் உறுப்புகளின் பதில்மொழிக்கு ஏற்ப பெறுகின்ற கொடை பொருத்தமானதாக அமைந்திருக்கிறது. உண்மை சீடத்துவம் உள்ளுறையும் இறைமையை உணர்வதாகும். இதில் இதயத்தில் எழும் மேய்ப்பனின் குரலை அங்கீகரித்து, அதனை நுணுக்கமாய் பின்பற்ற இணங்குவதும் அடங்கும். இதன் இறுதி நிலையில், மேய்ப்பனாம் இயேசுவின் மீது கொள்ளும் நம்பிக்கை இயேசுவோடு மட்டுமல்ல இறைத்தந்தையோடும் இணைக்கின்றது. எனவே, இறைத்தந்தை தற்போதைய வாழ்வில் பாதுகாப்பையும் வரவிருக்கும் வாழ்வில் நித்திய வாழ்வையும் தொகுத்து நம்பிக்கையாளருக்கு கொடையாக தருகிறார்.