*4th week in Easter Time, Monday – 13th May 2019 — Gospel: Jn 10,1-10*
*Jesus, the Good Leader *
There were two ways to enter a sheepfold, depending on whether one wished to shepherd the sheep or do harm to them. The one who enters by deception is a thief; the one who enters through the gate is the shepherd. Jesus, the Good shepherd, first presents himself as the gateway for his flock. He exhibits leadership as shepherd of God’s flock and the door to God. The opposing religious leaders are thieves and bandits, who treat their sheepfold badly. The gatekeeper has no hesitation in letting the true shepherd into the fold. In contrast to the bad leaders, Jesus is the way through which the sheep are protected and the way of access to good pasture. He is the mediator who will provide them with what they need and desire: i.e., both secure protection and abundant nourishment.
ஆட்டை கண்காணிப்பது அல்லது தீங்கிழைக்க விரும்புவதைப் பொறுத்து ஆட்டுப்பட்டிக்குள் நுழைவதற்கு இரண்டு வழிகள் இருந்தன. ஏமாற்றி நுழைபவன் திருடன். வாசல் வழியாக நுழைகிறவன் கண்காணிப்பாளன். நல்ல கண்காணிப்பாளரான இயேசு முதலில் தன் மந்தையின் நுழைவாயிலாக தன்னையே முன்னிலைப்படுத்துகின்றார். தன்னுடைய தலைமைத்துவத்தில் கடவுளுடைய மந்தையின் கண்காணிப்பாளராகவும் கடவுளுடைய வாசலாகவும் அவர் வெளிப்படுத்துகின்றார். எதிர்க்கும் மதத் தலைவர்கள் திருடர்களாகவும் கொள்ளைக்காரர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் மந்தையை தவறாக வழிநடத்துகின்றார்கள். இருப்பினும், வாயில் காப்போன் எவ்வித தயக்கமின்றி உண்மை கண்காணிப்பாளரை மந்தைக்குள் அனுப்புவார். மோசமான தலைவர்களுக்கு மாறாக, செம்மறிகளுக்கு பாதுகாப்பாகவும், நல்ல மேய்ச்சலுக்கும் இயேசுவே வழியாக திகழ்கின்றார். அவரே நடுநிலையாளராக இருந்து, அதாவது பாதுகாப்பு அரணாகவும் மற்றும் நிறைவான ஊட்டச்சத்தாகவும் அவர்களின் தேவைகளையும் விருப்பங்களையம் வழங்குகின்றார்.