Arulvakku

18.06.2019 — Be partakers of Divine Love

*11th Week in Ord. Time, Tuesday – 18th June 2019 — Gospel: Mt 5,43-48*
*Be partakers of divine love *
Christ’s originality as a moral teacher lies not so much in the novelty of His commandments. Instead, it lies in His perspective and motives, in His being and in giving the power to fulfill what He commands. In God the perfection is not something attained, but exists eternally. We draw near to this perfection and become partakers of the divine nature when we love as He loves. Jesus says, if you want to be perfect, begin by loving your enemies, “so that you may be children of your Father in heaven”. To love because we shall gain something, either in this world or in the next, is not love but long-sighted selfishness. Instead to widen our love so as to take in all men, by the vision of the reward, is not selfishness but a legitimate strengthening of our weakness. The reward contemplated is nothing less than the growth of likeness to the Father in heaven, and the increase of filial consciousness and the clear and deeper cry, ‘Abba, Father’.
அறநெறி ஆசிரியரான கிறிஸ்துவின் உண்மைத்தன்மை புதுமையான அவருடைய கட்டளைகளில் வெளிப்படுவது இல்லை. மாறாக, அவருடைய கண்ணோட்டம் மற்றும் நோக்கங்களிலும், அவருடைய இயல்பிலும், அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுவதினால் பெறும் ஆற்றலிலும் அடங்கியுள்ளது. கடவுளே நிறைவாய் இருப்பது அவர் தேடி அடையவது அல்ல, ஆனால் என்றென்றும் அவரோடு இணைந்திருக்கின்றது. நாம் இந்த நிறைவுக்குள் நெருங்கி வர, இறைவன் அன்பு செய்வது போலவே நாமும் அன்பு செய்தால் அந்த இறை இயல்பில் பங்கெடுக்க முடியும். நீங்கள் நிறைவுள்ளவராய் இருக்க வேண்டுமென்றால், உங்களுடைய எதிரியை அன்பு செய்யுங்கள் என்கிறார் இயேசு. இதனால் நீங்கள் விண்ணகத் தந்தையின் மக்களாய் இருப்பீர்கள் என்றும் கூறுகிறார். இவ்வுலகிலோ அல்லது மறுஉலகிலோ எதையாவது பெறுவோம் என்பதற்காக அன்பு செய்வது உண்மையான அன்பு அல்ல; மாறாக தொலை நோக்கு பார்வை கொண்ட சுயநலமாகும். வெகுமதியின் பார்வையில், அன்பை விரிவுபடுத்தி எல்லாரையும் அரவணைத்து அன்பு செய்வது சுயநலம் அல்ல; மாறாக, இது நம்முடைய பலவீனத்தை சட்டபூர்வமாக வலுப்படுத்துவதாகும். பரிசீலிக்கப்பட்ட வெகுமதியானது, விண்ணகத் தந்தையோடு நம்முடைய வளர்ச்சியை ஒப்பிடுவதும், மேலும் பிள்ளைகளுக்குரிய உணர்வுநிலையை அதிகப்படுத்துவதும், மற்றும் அப்பா தந்தாய் என்ற உள்ளார்ந்த உணர்வை தெளிவுபடுத்துவதும் ஆகும்.