Arulvakku

02.07.2019 — Fear of Little Faith

*13th Week in Ord. Time, Tuesday – 2nd July 2019 — Gospel: Mt 8, 23-27*
*Fear of little Faith *
In this passage fear is central to the state of being Jesus’ disciples. The evangelist Matthew characterizes their religious experience, of being with Jesus in the troubled sea, as ‘little faith’. In the Hebrew Scriptures the stormy sea represents the forces of chaos and evil. Yet God can control this formidable power that threatens his people. The Psalmist prays, “You rule the raging of the sea; when its waves rise, you still them” (Ps 89,9). And it depicts men who lose courage in the storm, “They cried out to the Lord in their trouble, and he brought them out of their distress. He stilled the storm to a whisper; the waves of the sea were hushed” (Ps 107, 28-29). The stilling of the storm provides a comforting image for disciples of all ages who are threatened by overwhelming forces. By approaching Jesus in prayer – “Lord, save us” the disciples can place their trust in his power and they need to overcome their fear of little faith.
இயேசுவின் சீடர்கள் மத்தியில் பயம் மையம் கொண்டுள்ளதை இப்பகுதி எடுத்துக் காட்டுகிறது. கொந்தளித்த கடலில் இயேசுவோடு படகில் இருந்தவர்களின் அனுபவத்தை குறைவான நம்பிக்கை என்று மத்தேயு நற்செய்தியாளர் வகைப்படுத்துகிறார். எபிரேய மறைநூலில் கொந்தளித்த கடல் குழப்பான சூழலையும் மற்றும் தீய சக்தியினையும் குறிக்கிறது. ஆயினும் தம் மக்களை அச்சுறுத்தும் இந்த வல்லமைமிக்க சக்தியை கடவுள் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பப்பட்டது. திருப்பாடல் ஆசிரியர் இவ்வாறு வேண்டுதல் செய்கிறார், “கொந்தளிக்கும் கடல்மீது நீர் ஆட்சி செலுத்துகின்றீர், பொங்கியெழும் அதன் அலைகளை அடக்குகின்றீர்” (திபா 89,9). மேலும் புயலில் தைரியத்தை இழக்கும் மனிதர்களையும் திருப்பாடல் சித்தரிக்கிறது. “தம் நெருக்கடியில் அவர்கள் ஆண்டவரைக் கூவியழைத்தனர், அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார். புயல்காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார், கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன” (திப 107,28-29). இவ்வாறு, புயலை அடக்கிய உருவம் எல்லா நிலையில் உள்ள சீடர்களுக்கும் ஒரு பெரிய நம்பிக்கையை தருகின்றது. அதாவது மூழ்கடிக்கின்ற துன்பங்களின் அச்சுறுத்தலிருந்து விடுதலை கிடைக்கிறது. “ஆண்டவரே எங்களைக் காப்பாற்றும்” என்ற செபத்தின் வழியே இயேசுவை அணுகுவதன் மூலம் சீடர்கள் ஆண்டவருடைய வல்லமையில் நம்பிக்கை வைக்கின்றனர். மேலும் அவர்கள் பயம் என்ற குறைவான நம்பிக்கையிலிருந்து கடந்து செல்ல வேண்டும்.