Arulvakku

20.07.2019 — Sabbath, a foreshadow of Messianic age

15th Week in Ord. Time, Saturday – 20th July 2019 — Gospel: Mt 12,14-21

Sabbath, A foreshadow of Messianic age

Jesus’ teaching about the Sabbath expresses the Jewish belief that the Sabbath anticipates the messianic age. It is a foretaste of God’s kingdom, and anticipation in the present world of the world to come. The coming day of perfect peace, healing and joy is foreshadowed in God’s gift of the Sabbath. With Jesus the kingdom is at hand, as he brings the blessedness and wholeness that had long been associated with the Sabbath. Jesus is God’s servant of fulfillment, as proclaimed by the prophet Isaiah. He is the servant upon whom God has given his Spirit. His Spirit-empowered ministry is characterized by deeds of justice rather than inflammatory words. He will handle the weak ones, the injured reeds and the flickering wicks, with compassionate care. In this way he will bring about justice, not only to Israel but to the Gentiles throughout the earth.

ஓய்வுநாள் மெசியாவின் காலத்தை எதிர்நோக்கி இருக்கிறது என்ற யூத நம்பிக்கையை இயேசு ஓய்வுநாள் பற்றிய தம் போதனையில் தெளிவுபடுத்துகின்றார். இது இறையரசின் முன்னறிவிப்பாகும்; மேலும் தற்போதைய உலகில் வர இருக்கும் உலகின் எதிர்பார்ப்பையும் உள்ளடக்கியது. கடவுளின் கொடையான ஓய்வுநாளில் எதிர்நோக்கியிருக்கும் நிறைவான அமைதி, குணப்படுத்துதல் மற்றும் மகிழ்ச்சி அறிவிக்கப்படுகின்றன. இயேசுவில் இறையாட்சி நெருங்கிவிட்டது. ஏனெனில் நீண்ட காலமாய் ஓய்வுநாளுடன் இணைந்திருந்த ஆசிர்வாதத்தையும் முழுமையையும் அவர் கொண்டு வருகின்றார். ஏசாயா இறைவாக்கினர் முன்னறிவித்தபடி கடவுளின் பணியாளராம் இயேசு நிறைவாக்குகின்றார். இவரே கடவுள் தம்முடைய ஆவியை வழங்கிய பணியாளர். ஆவியால் அதிகாரம் பெற்ற அவருடைய பணி கோபமூட்டும் வார்த்தைகளால் அல்ல, மாறாக நீதியின் செயல்களால் நிறைந்துள்ளது. அவர் பலவீனமானவர்களையும், உடைந்த நாணல்களையும், ஒளிரும் திரியையும் கருணையுடன் கவனிக்கின்றார். இவ்வாறு அவர் இஸ்ரயேலருக்கு மட்டுமல்ல, பிற இனத்தாருக்கும் இப்புவியில் நீதியைக் கொண்டு வருகின்றார்.