Arulvakku

22.07.2019 — Seek Jesus and find yourself

16th Week in Ord. Time, Monday – 22nd July 2019 — Gospel: Jn 20,1.11-18

Seek Jesus and find yourself  

Everyone who loves Jesus leaves behind his or her old sinful ways and becomes new person in Christ. Mary Magdalene was one such person, who discarded her old self and gained Christ through her desperate search. She had loved Jesus unconditionally and above all else. In Mary Magdalene’s post-resurrection encounter with Jesus, He made her realize her real self-worth as the daughter of God. In the process, Magdalene is converted and she discards her old self and puts on the new self, i.e., Jesus. When Jesus appeared to her personally, her love towards him was so intense that she was filled with great joy. In haste, she went and told all the disciples that she had seen the Lord. What a dramatic experience for Magdalene that brought her not only bountiful blessings, but made her an “apostle for His apostles.”  She constantly sought Jesus her lover and finally found herself as a priceless jewel in announcing the good news of His resurrection.

இயேசுவை நேசிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய பழைய பாவ வாழ்வை விட்டுவிட்டு கிறிஸ்துவில் புதிய நபராக மாறுகிறார்கள். மரிய மகதலாவும் அத்தகைய நபராக திகழ்கின்றார். அவர் தன்னுடைய தீவிர தேடலின் மூலம் கிறிஸ்துவைப் பெற்றதால் பழைய வாழ்வை நிராகரித்தார். அவள் இயேசுவை நிபந்தனையின்றி எல்லாவற்றிற்கும் மேலாக நேசித்தாள். இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பிந்தைய சந்திப்பில், கடவுளின் மகள் என்ற தனது உண்மையான சுய மதிப்பை மகதலா உணர்ந்தாள். இந்த செயல்பாட்டில், மகதலா மனமாற்றம் அடைந்தார். இதனால் அவள் பழைய நிலையை நிராகரித்துவிட்டு இயேசுவை ஏற்றுக் கொண்ட புதிய வாழ்வை வாழலானார். இயேசு அவளுக்குத் தனிப்பட்ட விதத்தில் தோன்றியதால், அவர்மீது தீவிர அன்பு கொண்டிருந்தாள். உடனடியாக அவள் சீடர்கள் அனைவரிடமும் சென்று ஆண்டவரைக் கண்டதாகச் சாட்சியம் பகர்கிறாள். மகதலாவுக்கு என்னே வியத்தகு அனுபவம். அது அவளுக்கு ஏராளமான ஆசீர்வாதங்களைக் கொடுத்தது மட்டுமல்லாமல், அவளை “இயேசுவின் சீடர்களுக்கே அப்போஸ்தலராக” அனுப்பியது. தம் அன்பராம் இயேசுவை அவள் தொடர்ந்து தேடினாள். இறுதியில் இயேசுவின் உயிர்ப்பை நற்செய்தியாக அறிவிக்கும் விலைமதிப்பற்ற அணிகலனாக தன்னையே கண்டு கொண்டாள்.