Arulvakku

24.07.2019 — Bear fruits of your potency

16th Week in Ord. Time, Wednesday – 24th July 2019 — Gospel: Mt 13,1-9

Bear fruits of your potency

The famous parable of the sower provides a perfect example for ones disposition to the kingdom of God. Jesus told His hearers to imagine the sower and what he’s doing, and the consequences a little while later when the seed begins to sprout and then grow and finally mature. Obviously the first three environments, in which the seeds fell, were not ideal because the seeds did not grow up to their potency. We become like the first three environments, when we intentionally turn a deaf ear to God’s word. In contrast the last environment, the good soil, is the true people of God. This happens when we open our whole being to God’s will. The seeds of God’s kingdom grow within us and in that process we bear fruits in abundance, which turn into God’s blessing to others. In His infinite goodness, God uses various modes to sow His teachings perpetually in the land of our hearts. What He desires of us is to be always like the good soil, which bears fruits according to its potency and become a blessing in our environment.

பிரபலமான விதைப்பவரின் உவமை இறையாட்சியை தேடுபவரின் மனநிலையை காட்டும் சரியான உதாரணமாக திகழ்கின்றது. விதைப்பவர் மற்றும் அவருடைய செயல்களையும், இன்னும் சிறிது நேரத்திற்குப் பின் விதை முளைக்க ஆரம்பித்து, பின்னர் வளர்ந்து முதிர்ச்சியடைவதையும் கற்பனை செய்து காணும்படி இவ்வுவமையை கேட்பவர்களிடம் இயேசு கூறுகின்றார். விதைகள் விழுந்த முதல் மூன்று சூழல்களும் சிறந்தவையாக அமையவில்லை. காரணம் விதைகள் தங்களின் விருட்சத்தோடு வளரவில்லை. கடவுளின் வார்த்தையை காது கொடுத்துக் கேளாதபோது நாமும் இந்த முதல் மூன்று சூழல்களுக்குள் சிக்கிக் கொள்கின்றோம். இதற்கு மாறாக, கடைசி சூழலான நல்ல நிலம் கடவுளின் உண்மையான மக்களை இனம் காட்டுகின்றது. கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப நம் முழு வாழ்வையும் அர்ப்பணிக்கும் போது நல்ல பலன் கிடைக்கின்றது. இறையாட்சியின் விதைகள் நமக்குள் வளரும் பொழுது, நாம் நிறைவான விளைச்சலைத் தருகின்றோம்; அவை மற்றவர்களுக்கு கடவுளின் ஆசீர்வாதமாகவும் மாறுகின்றது. கடவுளின் எல்லையற்ற நன்மைத்தனத்தினால் நம்முடைய உள்ளம் என்னும் நிலத்தில் நிரந்தரமாக நல்ல போதனைகளை விதைக்க கடவுள் பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றார். எப்போதும் நல்ல நிலத்தில் விழும் விதைகள் விருட்சம் அடைந்து வளர்வதைப் போல, நாமும் நம்முடைய சுற்றுப்புறத்தில் கடவுளின் ஆசிர்வாதமாக திகழ வேண்டும் என கடவுள் நம்மிடம் விரும்புகின்றார்.