Arulvakku

25.07.2019 — God transforms human weakness

16th Week in Ord. Time, Thursday – 25th July 2019 — Gospel: Mt 20,20-28

God Transforms human weakness

James is the first of the apostles to be martyred and is the only one who has his death recorded in the New Testament (Acts 12,1-2).The synoptic gospels describe that he is the brother of John, the evangelist and they were the sons of a fisherman, Zebedee. James is part of threesome that seems to have a special closeness with Jesus. He, Peter and John witness the transfiguration and are present in the Garden of Gethsemane, the night of Jesus’ arrest. The story of the mother of James and John asking secure places for their two sons in Jesus’ kingdom show that their special place in Jesus’ heart was apparent to others. So much so that it fosters jealousy among the apostles. Whether we express it or not, each of us wants to be recognized, wants to be accepted and seeks higher positions in the society. We all have the temptation to follow the easy and the comfortable path – a path which often seeks to avoid rejection, struggles and pain. Jesus reminds us that to secure a place in God’s kingdom, demands a life of service and self-sacrifice, through the path of suffering, which can lead even to death. James and other disciples have been a witness to this by dying to oneself, to one’s selfishness, to one’s pride and arrogance. Thus God gradually transformed their human weaknesses into courageous and trusting testimony of God’s love and forgiveness. யாக்கோபு அப்போஸ்தலர்களில் முதல் மறைசாட்சியாக மரித்தவர். அவருடைய இறப்பு மட்டுமே புதிய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒத்தமை நற்செய்திகளில் இவர் நற்செய்தியாளரான யோவானின் சகோதரன் என்றும், மீன்பிடிப்பவரான செபதேயுவின் இரண்டு மகன்களில் ஒருவர் என்றும் அறிகிறோம். இயேசுவோடு மிக நெருக்கமான மூவருள் இவரும் ஒருவர். இவரும் பேதுருவும் யோவானும் இயேசுவினுடைய உருமாற்றத்தின் சாட்சியாய் விளங்குகிறார்கள்; மற்றும் கெத்சமனித் தோட்டத்தில் இயேசுவைக் கைது செய்யப்பட்ட இரவில் இம்மூவரும் உடனிருந்தனர். யாக்கோபு மற்றும் யோவான் இவர்களின் தாய் இயேசுவை அணுகி வந்து இயேசுவின் இறையரசில் அவர்கள் இருவருக்கும் பாதுகாப்பான இடங்களைக் கேட்பதிலிருந்து இயேசுவின் இதயத்தில் அவர்களுக்கு மிகச் சிறந்த இடமிருந்ததை மற்றவர்களும் அறிந்திருந்தார்கள் என்பதை காட்டுகிறது. இது அப்போஸ்தலர்களிடையே பொறாமையை வளர்த்திருக்கக் கூடும். நாம் வெளிப்படுத்தினாலும் வெளிப்படுத்தாவிட்டாலும், ஒவ்வொருவரும் பிறரிடமிருந்து அங்கீகாரம் பெறவும், ஏற்றுக் கொள்ளப்படவும், சமூகத்தில் உயர்ந்த பதவிகளை பெற்றுக் கொள்ளவும் விரும்புகிறோம். இதற்காக கடினமான, போராட்டமான மற்றும் வேதனைகள் நிறைந்த பாதைகளைத் தவிர்த்து, முற்றிலும் எளிதான மற்றும் சுகமான பாதையை பின்பற்றும் சோதனையை நாம் அனைவரும் மேற்கொள்கிறோம். இறையரசில் பாதுகாப்பான இடத்தைப் பெறுவதற்கு ஒருவர்  துன்பத்தின் மூலம், சேவை நிறைந்த அல்லது தியாகம் நிறைந்த வாழ்வையோ, அல்லது வாழ்வையே இழக்கும் நிலையிலோ, தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்பதை இயேசு இங்கு  நினைவூட்டுகின்றார். இவ்வாழ்விற்கு யாக்கோபும் மற்ற சீடர்களும் தங்கள் சுயநலன்களையும்,  ஆணவம் மற்றும் தற்பெருமையையும் இழந்து, இயேசுவிற்கு சாட்சிகளாக திகழ்ந்துள்ளார்கள். இவ்வாறு கடவுள் படிப்படியாக அவர்களின் மனித பலவீனங்களை உறுதியான மனநிலையாக மாற்றி கடவுளின் அன்பிற்கும் மன்னிப்பிற்கும் நம்பகமான சாட்சிகளாக மாற்றியுள்ளார்.