Arulvakku

02.08.2019 — Negative excitement

17th Week in Ord. Time, Friday – 2nd August 2019 — Gospel: Mt 13,54-58

Negative excitement

The narrative here focuses entirely on Jesus with various interrogations. While the crowds hearing the sermon on the mount were “astonished” in a positive way (7,28), the excitement in Nazareth turns out to be negative. By an inclusion the first and last questions (vv.54 & 56) of the Nazarenes emphasize the basic question of the origin of Jesus’ wise teaching and powerful miracles, a perfect summary of the previous teachings (chaps. 5-7) and miracles (chaps. 8-9). In between the first and last questions are the other questions which explain why Jesus’ wisdom and power do not generate faith in his hometown, because the Nazarenes know him too well.  Familiarity breeds contempt even for the Messiah. The contempt can be felt in the twice mention of “this fellow” (vv.54 & 56), a form of human degradation. Even though everything the Nazarenes affirm is in one sense true and in another, deeper sense it is false. Because, the true family of Jesus is composed not of blood relatives but of obedient disciples (Mt 12,46-50). They are so confident in their knowledge that they refuse to “look with their eyes, and listen with their ears, and understand with their heart and turn” (Mt 13,15).

இப்பகுதி பல்வேறு கேள்விகளுடன் இயேசுவை முழுமையாக மையப்படுத்துகின்றது. மலைப் பொழிவின் இறுதியில் இயேசுவின் போதனையைக் கேட்ட மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர் என்ற நேர்மறை கருத்துக்களுக்கு எதிராக, இங்கு தம் சொந்த ஊரான நாசரேத்தில் அவருடைய போதனையை கேட்ட மக்கள் வியப்பில் ஆழ்ந்தாலும் எதிர்மறையாக அமைந்திருக்கிறது. நாசரேயர்களின் முதல் மற்றும் கடைசி கேள்விகள் இயேசுவின் ஞானம் நிறைந்த போதனையையும் மற்றும் அற்புதம் நிகழ்த்தும் வல்லமையையும் கேள்விக்குட்படுத்துகிறது. இது முந்தைய போதனைகள் (5-7 அதி.) மற்றும் அற்புதங்களின் (8-9 அதி.) இரத்தினச் சுருக்கம் எனலாம். முதல் மற்றும் கடைசி கேள்விகளுக்கு இடைப்பட்ட கேள்விகளினால், ஏன் இயேசுவின் அறிவார்ந்த போதனையும் வல்லமையும் மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கவில்லை என்பதை விளக்குகின்றன. காரணம் நாசரேயர்கள் அவரை நன்கு அறிந்திருந்தார்கள். நன்கு அறிந்திருப்பது மெசியாவிற்கும் அவமதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த அவமதிப்பை “இவருக்கு”  என்று குறிப்பிட்டு இரட்டிப்பாக்கியுள்ளார்கள். நாசரேயர்கள் உறுதிப்படக் கூறும் அனைத்தும் ஒரு கருத்தில் உண்மையென்றாலும், இன்னொரு வகையில், இன்னும் ஆழமான விதத்தில், அவர்களின் கருத்து தவறானதாகும். காரணம் இயேசுவின் உண்மையான உறவு நிலை இரத்த உறவினால் உருவானதல்ல, மாறாக கீழ்ப்படிதலுள்ள சீடர்களால் உருவானது. அவர்கள் தங்களின் மெய்யறிவில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள், ஆதலால் அவர்கள் “கண்களால் பார்க்கவும், காதுகளால் கேட்கவும், இதயத்தில் புரிந்து கொண்டு மனந்திரும்பிடவும் மறுக்கிறார்கள்.”