Arulvakku

01.08.2019 — Jesus, the fulfillment of the Old

17th Week in Ord. Time, Thursday – 1st August 2019 — Gospel: Mt 13,47-53

Jesus, the fulfillment of the old

The seven preceding kingdom parables are foundation for Christian scholarship and discipleship. It is typical of Matthew that the disciples, the rightful heirs of the kingdom, “understand” the secrets of the kingdom of heaven as in Mt 13,11. Jesus replies to their joyful “yes” by describing another parable of new and old. The telling order of words, “new” is placed before the “old”, is contrary to natural expectations. The old refers to the scribes learning of the Law and the prophets, while the new means the proclamation of God’s kingdom and Jesus as the fulfillment of the old. Naturally it applies to the new treasures of the gospel and old treasures of the law. This discourse alludes to Mt 5,17 and 9,17 shedding light on the definitive norm of fulfillment, which is a new revelation. The best example in Matthew’s gospel is the priority of Jesus’ New to the scriptural Old: the six-fold antithesis “You have heard of old, but I say to you” that lies at the heart of the Sermon on the Mount. God, the inspirer and author of both the Testaments, wisely arranged that the New Testament be hidden in the Old and the Old be made manifest in the New (St.Augustine).

விண்ணரசு பற்றிய முந்தைய ஏழு உவமைகள் கிறித்தவ புலமைக்கும் சீடத்துவத்திற்கும் அடித்தளம். விண்ணரசின் உரிமை வாரிசுகளான சீடர்கள் இறையரசின் இரகசியங்களை மத்தேயு 13,11ல் காணுவது போல் “புரிந்து கொண்டார்கள்” என்று வெளிப்படுத்துகிறார் நற்செய்தியாளர். “ஆம்” என்ற அவர்களின் மகிழ்ச்சியான பதிலைக் கொண்டு இயேசு “புதிய” மற்றும் “பழைய” சிந்தனைகளை உள்ளடக்கிய மற்றொரு உவமையை விவரிக்கின்றார். “புதியது” மற்றும் “பழையது” என்ற சொற்களின் வரிசை இயற்கை எதிர்பார்ப்புகளுக்கு முரணானது. பழையவற்றை என்று கூறுவது அறிஞர்கள் கற்றுக் கொள்ளும் சட்டங்களையும் இறைவாக்கினர்களையும் குறிக்கிறது. அதே சமயம் புதியவற்றை என்று குறிப்பிடுவது இறையாட்சியை அறிவிப்பதும், இயேசுவே பழையவற்றின் நிறைவு என்றும் குறிக்கிறது. இது இயற்கையாகவே புதிய கொடையான நற்செய்திக்கும், பழைய கொடைகளான சட்டத்திற்கும் பொருந்தும். இது புதிய வெளிப்பாட்டை நிறைவாக்கும் இரண்டு வசனங்களை (மத் 5,17 மற்றும் 9,17) சுட்டிக் காட்டுகிறது. மத்தேயு நற்செய்தியில் காணும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு, பழைய இறைவார்த்தைகளுக்கு இயேசு தரும் புதிய விளக்கங்களின் முன்னுரிமையாகும். இது மலைப்பொழிவின் மையத்தில் “… என நீங்கள் முற்காலத்தில் சொல்லக் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் …” என்ற வாசனங்களைக் கொண்ட ஆறு  முரண்பாடுகளாக அமைந்துள்ளன. இதனை தூய அகுஸ்தீன், இரண்டு ஏற்பாடுகளின் தூண்டுதலும் எழுத்தாளருமான கடவுள், புதிய ஏற்பாட்டை பழையவற்றில் மறைத்தும், பழைய ஏற்பாட்டை புதியவற்றில் வெளிப்படுத்தும்படியும் விவேகமுடன் தொகுத்துள்ளார் என்கிறார்.