Arulvakku

05.08.2019 — Keep serving the promised meal

18th Week in Ord. Time, Monday – 5th August 2019 — Gospel: Mt 14,13-21 or Lk 11,27-28

Keep serving the promised meal

Seeing the crowd’s hunger, Jesus told the disciples to feed them. The disciples, no strangers to service, were now asked to dedicate more time for service. When they confessed their inability to feed the crowd, Jesus blessed and broke the few loaves of bread they had, and gave them to the disciples to distribute. This meal fulfilled the promises God made long before, “Everyone who thirsts, come to the waters; and you that have no money, come, buy and eat… Listen carefully to me, and eat what is good, and delight yourselves in rich food.” (Is 55,1-2). This passage describes the Messianic banquet, the time when God will bring his people into his presence to celebrate a holy festival in abundance of joy. This meal also foreshadows the eucharistic presence of Jesus. When Jesus feeds the crowds and the disciples with his eucharist, he strengthens them and shares his presence with them so that each of us will serve others as his disciples did.

கூட்டத்தினரின் பசியைக் கண்ட இயேசு சீடர்களிடம் அவர்களுக்கு உணவளியுங்கள் என்று  கேட்டுக் கொண்டார். சேவைக்கு முன்னுரிமை அளித்த சீடர்களிடம் இன்னும் அதிக நேரம் சேவைக்கு ஒதுக்குமாறு பணிக்கின்றார். திராளான கூட்டத்திற்கு உணவளிக்க இயலாததை சீடர்கள் ஒப்புக் கொண்ட போது, இயேசு அவர்களிடம் இருந்த சில ரொட்டித் துண்டுகளை ஆசிர்வதித்து, உடைத்து சீடர்கள் மூலம் பகிர்ந்தளிக்கக் கொடுத்தார். இந்த உணவு வெகு காலத்திற்கு முன்பே கடவுள், தாகமாய் இருப்பவர்களே, நீர்நிலைகளுக்கு வாருங்கள், பணமில்லாதவர்களே, வாருங்கள், தானியத்தை வாங்கி உண்ணுங்கள்,எனக்கு கவனமாய்ச் செவிகொடுங்கள்,  நல்லுணவை உண்ணுங்கள், கொழுத்ததை உண்டு மகிழுங்கள்என்று அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாய் அமைந்துள்ளது. இது கடவுள் தம் மக்களின் முன்னிலையில் வந்து ஒரு புனித திருவிழாவை நிறைவான மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார் என்பதனை எடுத்துக் கூறுகிறது. இதனையே இப்பகுதி மெசியாவின் விருந்தாக விவரிக்கிறது. இந்த உணவு பரிமாற்றம் இயேசுவின் நற்கருணையின் உடனிருப்பை முன்னறிவிக்கிறது. இயேசு தனது நற்கருணை மூலம் கூட்டத்தினருக்கும் சீடர்களுக்கும் உணவளித்தார். இதனால் அவர்களை உறுதிப்படுத்தி, தன்னுடைய உடனிருப்பை பகிர்ந்து கொண்டார். மேலும் தம் சீடர்கள் இந்த உடனிருப்பை பிறருடன் பகிர்ந்து கொண்டது போன்று நம்மையும் சேவை மனப்பான்மையுடன் வாழ அழைக்கின்றார்.