Arulvakku

08.08.2019 — God’s revelation acknowledged

18th Week in Ord. Time, Thursday – 8th August 2019 — Gospel: Mt 16,13-23

God’s revelation acknowledged

This pivotal scene witnesses to a breakthrough in the disciples’ understanding of Jesus, when Simon Peter, the first of the twelve apostles, acknowledges the great truth that Jesus is the “Messiah, the Son of the living God”. This response seems to echo the words of the disciples in the boat, who worshipped Jesus and professed his divine sonship saying “Truly you are the Son of God” (Mt 14,33). This theophany portrays Jesus as having mastery over the natural elements, and of saving his disciples from the chaos that threatened them in the sea. At the foot of the cross, having witnessed the strange signs the Centurion and his soldiers also profess with the same wording (Mt 27,54). However, Peter’s declaration of faith is unique because it does not include any extraordinary signs, but a personal revelation from God. In calling Jesus as “Messiah”, Peter is saying that Jesus is the one for whom he and the Jewish people have been waiting. In the simplicity of his human condition, Jesus fulfills the hopes and aspirations of Israel. He is the anointed one of God, the one in whom God’s Spirit dwells. In calling Jesus “the Son of the living God”, Peter recognizes the special relationship that bound Jesus with the Father. Peter knows this because he has watched Jesus pray often quietly and reach out to the poor, the needy, the sick and the marginalized. He has witnessed Jesus doing the deeds of the Messiah (11,2). Since Peter was open to God’s revelation, he was able to penetrate into the deep mysteries of Jesus’ relationship to God the Father and of Jesus’ mission from God.

முக்கியமான இக்காட்சியில், இயேசு “மெசியா, வாழும் கடவுளின் மகன்;” என்ற ஆழ்ந்த உண்மையை பன்னிரண்டு திருத்தூதர்களில் முதன்மையான சீமோன் பேதுரு அறிக்கையிடுகின்றார். இயேசுவைப் பற்றிய சீடர்களின் புரிதலில் இது ஒரு முன்னேற்றத்தைக் காட்டுகிறது. இது படகில் இருந்த அவருடைய சீடர்களின் வார்த்தைகளை எதிரொலிப்பதாக தெரிகிறது. அவருடைய தெய்வீக மகத்துவத்தை உணர்ந்து அவரை வணங்கி “உண்மையாகவே நீர் இறைமகன்” என்று அவர்கள் அறிக்கையிட்டனர். இவ்வெளிப்பாடு மூலம் இயேசு இயற்கையை ஆட்கொண்டவராகவும் கடலில் சிக்கி தவித்த சீடர்களை காப்பாற்றுவதாகவும் சித்தரிக்கின்றது. சிலுவையின் அடியில் நின்ற நூற்றுவர்தலைவனும் அவரது படைவீரர்களும் விசித்திரமான அருங்குறிகளைக் கண்டு “இவர் உண்மையாகவே இறைமகன்” என்று அதே சொற்களை கூறுகின்றனர். இருப்பினும் பேதுருவின் விசுவாச அறிக்கை தனித்துவமானது, ஏனெனில் அதில் கடவுளின் தனிப்பட்ட வெளிப்பாடு இருந்தது, ஆனால் வியப்புக்குரிய அருங்குறிகள் ஏதும் இல்லை. பேதுருவும் யூதர்களும் மெசியாவின் வருகைக்காக காத்திருந்ததை வெளிப்படுத்த இயேசு ‘மெசியா’ என்று அழைத்தார் பேதுரு. இஸ்ரயேலின் நம்பிக்கைகளையும் ஆர்வத்தையும் இயேசு தன்னுடைய எளிமையான மானுட உருவில் நிறைவேற்றுகிறார். அவர் கடவுளின் அருட்பொழிவும் ஆவியானவரின் உள்ளுறைதலும் நிறைந்தவராய் வாழ்ந்தார். இயேசு தந்தையுடன் கொண்டிருந்த தனிப்பட்ட உறவை பேதுரு அங்கீகரித்து இயேசுவை “வாழும் கடவுளின் மகன்” என்றும் அழைக்கிறார். இயேசு அடிக்கடி தனிமையில் செபிப்பதையும் மற்றும் ஏழைகள், தேவையில் உள்ளோர், நோய்வாய்ப்பட்டவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்கள் இவர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததையும் அறிந்திருந்தார் பேதுரு. இவ்வாறு மெசியாவின் செயல்களை இயேசுவில் கண்டிருக்கிறார். கடவுளின் திருவெளிப்பாட்டிற்கு பேதுரு திறந்த மனம் கொண்டிருந்ததால், தந்தையாம் கடவுளுடன் இயேசு கொண்ட ஆழமான உறவையும் மற்றும் கடவுள் இயேசுவிற்கு தந்த பணியின் மறையுண்மைகள் பற்றியும் அவரால் ஊடுருவ முடிந்தது.