24th Week in Ord. Time, Thursday – 19th September 2019 — Gospel: Lk 7,36-50
Hospitality for the Salvation
The story of the sinner and the Pharisee provides the evangelist’s rationale for outsiders to come readily to repentance and acceptance of the gospel. Having had several things to say about the woman, Jesus never engages her in conversation. He does speak to her twice, both times only briefly, and only at the end of this particular encounter. Jesus, the divine visitor to the world, comes as guest to Simon’s house but receives little or no hospitality from the host who invited Him. A person publicly known as a sinner boldly breaks through the barrier of hostility to herself and her kind. She gives hospitality to Jesus sensing that a wider and deeper acceptance awaits her. In return, she receives from him a new outflow of the hospitality of God. Forgiveness and its resulting peace were the fruits of faith in Jesus. Hence Jesus the “Visitor from on high’ (Lk 1,78) responded: acknowledging her with forgiveness, ignoring the resultant questions of the other guests, remarking on her faith, and sending her off in peace. Simon, who has neither experienced this forgiveness nor felt the need for it, comes as cold, distant and unloving. By contrast, the marginalized woman, out of the abundance of her love and service, carried within her messianic peace and Jesus’ saving power. Further, Jesus reincluded her in the life of the community as she renewed her relationship with God.
பாவி மற்றும் பரிசேயரின் கதையில் ஒதுக்கப்பட்டோர் மனந்திரும்பி உடனடியாக நற்செய்தியை ஏற்றுக் கொள்வதற்கான காரணத்தை நற்செய்தியாளர் வழங்குகிறார். இக்கதையில் வரும் பெண்ணைப் பற்றிச் சொல்ல பல விடயங்கள் இருந்தாலும், அவளின் உரையாடலை இயேசு ஒருபோதும் ஊக்குவிக்கவில்லை. இந்த சந்திப்பின் முடிவில் அவளுடன் இரண்டு முறை மட்டுமே அவர் சுருக்கமாக பேசுகிறார். தெய்வீக விருந்தாளியான இயேசு, சீமோனின் வீட்டிற்கு விருந்தினராக வருகிறார். ஆனால் அவரை அழைத்தவர் சற்று கவனமின்றி செயல்படுகிறார். பகிரங்கமாக பாவி என அறியப்பட்டவர், அவளுக்கும் அவளைப் போன்று ஒதுக்கப்பட்டோருக்கும் உள்ள விரோதப் போக்கை தைரியமாக உடைக்கிறாள். தன்னுடைய விருந்தோம்பலில் விரிவான மற்றும் ஆழமான ஏற்றுக்கொள்ளல் காத்திருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட்டாள். அதற்கு ஈடாக, கடவுளுடைய விருந்தோம்பலின் புதிய வெளிப்பாட்டை இயேசுவிடமிருந்து அவள் பெற்றுக் கொள்கிறாள். இயேசுவை நம்புவோருக்கு மன்னிப்பும் அதன் விளைவாக அமைதியும் விருந்தோம்பலின் பலன்களாக கிடைக்கும். எனவே, “விண்ணிலிருந்து விடியலாக வரும்” (லூக் 1,78) இயேசு இவ்வாறு பதிலளிக்கிறார்: அவளின் செயலை ஏற்றுக்கொண்டு மன்னித்தது, மற்ற விருந்தினர்களின் கேள்விகளைப் புறக்கணித்தது, அவளுடைய நம்பிக்கையை அறிவித்தது, மற்றும் அவளை அமைதியில் அனுப்பி வைத்தது. இந்த மன்னிப்பை அனுபவிக்காத அல்லது அதன் அவசியத்தை உணராத சீமோன் மிகவும் அன்பற்றவராய், விலகி நிற்பவராய், கடின உள்ளத்தினராய் இருக்கிறார். இதற்கு நேர்மாறாக, ஒரங்கட்டப்பட்ட பெண், தன் அன்பு மற்றும் சேவையின் மிகுதியால், மெசியாவின் அமைதியையும் மற்றும் மீட்பளிக்கும் சக்தியையும் இயேசுவிடமிருந்து பெற்றுக் கொண்டாள். மேலும் கடவுளுடனான தனது உறவைப் புதுப்பித்ததால், இயேசு அவளை மீண்டும் குழும வாழ்வில் இணைத்துள்ளார்.