Arulvakku

18.09.2019 — Reject God’s plan for them

24th Week in Ord. Time, Wednesday – 18th September 2019 — Gospel: Lk 7,31-35

Reject God’s plan for them

This part of Jesus discourse is composed of rhetorical question (7,31), a parable (7,32), its application (7,33-34) and a concluding maxim(7,35). With simple illustration, Jesus compares John and himself to children inviting people to join in their games, only to be ignored. Their rejection, of John the Baptist who was very austere as well as of Jesus who came bringing the feast of the kingdom, makes them similar to children who refused to dance for both joyful and sorrowful tunes. They have found a justification for their refusal to heed John’s call to conversion and to welcome Jesus’ proclamation of the Good News of the kingdom. On the whole Jesus’ contemporaries chose to stay where they were, and to ignore both. Ironically, John and Jesus are rejected for their faithfulness to ministries to which they believe God has called them. However God’s wisdom is demonstrated in the actions of John, and Jesus, the messiah. If the people continue to reject the salvation being offered, they must know that they are rejecting God’s providential design for themselves. Those who reject the wisdom’s children (John and Jesus) are mistaken; for they are choosing to stay outside God’s circle. 

இயேசுவின் இந்த சொற்பொழிவுப் பகுதி பகுப்பாயும் கேள்வி (7,31), உவமை (7,32), அதன் பயன்பாடு (7,33-34) மற்றும் இறுதியாக ஒரு கோட்பாடு (7,35) ஆகியவற்றை உள்ளடக்கியது. எளிமையான விளக்கத்துடன், இயேசு யோவானையும் தன்னையும் விளையாட அழைக்கும் குழந்தைகளுடன் ஒப்பிடுவது முடிவில் புறக்கணிக்கப்படுவதற்காக. மிகவும் கடினமான தவ வாழ்வு வாழ்ந்த திருமுழுக்கு யோவானையும் இறையாட்சியின் விருந்தினை கொண்டாடிய இயேசுவையும் அவர்கள் நிராகரித்தனர். எப்படியெனில் மகிழ்ச்சியான மற்றும் துக்கமான இசைக்கு நடனமாட மறுக்கும் குழந்தைகள் நிராகரிப்பதைப் போல. இவர்கள் யோவானின் மனமாற்றத்திற்கான அழைப்பை செவிமடுக்காமலும், இயேசுவினுடைய இறையாட்சியின் நற்செய்தியை வரவேற்காமலும் தங்களை நியாயப்படுத்திக் கொண்டார்கள். ஒட்டுமொத்தமாக இயேசுவின் சமகாலத்தவர்கள் தாங்கள் இருந்த நிலையிலையே இருக்க இந்த இருவரையும் புறக்கணிக்க முடிவு செய்தனர். இதற்கு முரண்பாடாக, யோவானும் இயேசுவும் கடவுளின் அழைப்பிற்கு செவிமடுத்து அவர்களின் பணியில் நிலைத்திருந்;ததற்காக அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள். இருப்பினும் கடவுளின் ஞானம், யோவான் மற்றும் மெசியாவான இயேசுவின் செயல்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வழங்கப்படும் மீட்பை மக்கள் நிராகரித்தால், கடவுள் தங்களுக்கு வடிவமைத்துள்ள திட்டத்தினை நிராகரிக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஞானத்தின் பிள்ளைகளை (யோவான் மற்றும் இயேசு) நிராகரிப்பவர்கள் தவறு செய்கின்றார்கள்; அதாவது அவர்கள் கடவுளின் வட்டத்திற்கு வெளியே இருக்கத் தெரிவு செய்கிறார்கள்.