Arulvakku

09.10.2019 — Praying to a hospitable God

27th Week in Ord. Time, Wednesday – 9th October 2019 — Gospel: Lk 11,1-4

Praying to a hospitable God

The commendation of Mary’s single-minded attention to Jesus leads naturally into a request by the disciples. Once again they see Jesus in their midst praying and they know that John the Baptist had taught his disciples about prayer. So it is natural that they look to Jesus for guidance in this matter. The first part focuses solely upon God and invites His kingdom on earth. The second part is on what the community needs from God – sustenance, forgiveness, and rescue from tribulation. The community that prays this prayer is very conscious of its privileged closeness to God. It sees itself as a base for the kingdom in the present world. But it prays the prayer in the world, as part of the world, on behalf of the world, to which it testifies the onset of the kingdom. It is praying for food, for reconciliation, for deliverance from evil, not just for itself but for the entire human family. It tries to model and proclaim their dignity and destiny as the children of God. In short, the community is exhorted to pray that the entire human race may enjoy the hospitality it has itself received from God.

மரியாளின் கூர்மைப்படுத்தப்பட்ட கவனத்தை இயேசு பாராட்டுவது இயல்பாகவே சீடர்களின் செப வேண்டுகோளுக்கு வழிவகுக்கிறது. மீண்டும் அவர்கள் நடுவில் இயேசு செபிப்பதை காண்கிறார்கள். திருமுழுக்கு யோவான் தம்முடைய சீடர்களுக்கு செபத்தைப்பற்றி கற்பித்ததை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். எனவே அவர்களுடைய வழிகாட்டியாக இயேசுவை நோக்கியது இயல்பானது. முதல் பகுதி கடவுளை மட்டுமே மையமாகக் கொண்டு, இப்பூமியில் அவருடைய இறையாட்சியை வரவேற்கிறது. இரண்டாவது பகுதி குழுமத் தேவைகளான உணவு, மன்னிப்பு, மற்றும் துன்பங்களிலிருந்து விடுதலை, இவைகளுக்கு கடவுளிடம் கேட்பது. இச்செபத்தை செபிக்கும் குழுமம் கடவுளுடன் கொண்டுள்ள நெருக்கத்தை நன்கு அறிந்திருந்தது. இவர்கள் தற்போதைய உலகிற்கு இறையாட்சியின் அடித்தளமாக தன்னை அடையாளப்படுத்துகிறார்கள். எனவே, இவர்கள் இவ்வுலகின் சார்பாக, அதன் ஒரு பகுதியாக, இவ்வுலகில் இருந்து கொண்டு செபிப்பது, இறையாட்சியின் தொடக்கத்திற்கு சாட்சியமளிக்கவே. இக்குழுமம் உணவுக்காகவும், ஒப்புரவிற்காகவும், தீமையிலிருந்து விடுபடவும் தனக்காக மட்டுமல்ல, மனித சமூகம் முழுமைக்கும் செபிக்கின்றது. இதனால் அவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையையும் இலக்கினையும் முன்மாதிரியாக அறிவிக்க முயற்சிக்கிறார்கள். சுருங்கக் கூறின், மனித இனம் முழுவதும் கடவுளிடமிருந்து பெற்ற விருந்தோம்பலை அனுபவிக்கும்படி செபிக்க இச்சமூகம் அறிவுறுத்தப்படுகிறது.