Arulvakku

10.10.2019 — Shamelessly persistent

27th Week in Ord. Time, Thursday – 10th October 2019 — Gospel: Lk 11,5-13

Shamelessly persistent

After teaching them the universal prayer, Jesus tells them a parable to illustrate that even midnights and closed doors need not deter us from praying. In the parable of the midnight-friend and its accompanying instruction, Jesus inculcates the attitude of confidence that must go with the words of prayer. In Palestine, hospitality was a sacred duty that was highly valued and widely practiced (Lk 7,36-50; 9,51-52; 10,38-42; 19,1-10). Successful ancient hospitality often advanced the formation of permanent friendship. The sudden arrival of a guest in the midnight to a friend causes a crisis in hospitality. The parable highlights the sense of shame that is so powerful in such cultures. The neighbouring friend, who was unwilling to get up from bed and help, will experience shame inevitably before others the next day for refusing such a simple hospitality to a needy neighbour. Therefore the neighbouring friend is forced to do the right thing against personal inclination or interest. Now, this shame is not something that puts pressure directly upon the man who has gone to bed. It has been transferred to him, by the friend who comes for assistance. What causes him to get up is not personal shame but shameless persistence in knocking that he cannot simply ignore. Further, denial of his request will surely put his midnight friend to shame before his visiting friend.

உலகளாவிய செபத்தை அவர்களுக்குக் கற்பித்தபின், நள்ளிரவுகளும் மூடிய கதவுகளும் நம் செபத்தைத் தடுக்க இயலாது என்பதை ஒரு உவமை மூலம் இயேசு விளக்குகின்றார். நள்ளிரவு நண்பரின் உவமையிலும், அதனைத் தொடரும் அறிவுரையிலும் செபிக்கும் வார்த்தைகளில் இருக்க வேண்டிய நம்பிக்கையின் அணுகுமுறையை இயேசு கற்பிக்கின்றார். பாலஸ்தீனத்தில் விருந்தோம்பல் என்பது மிகவும் மதிப்புமிக்க மற்றும் பரவலாய் நடைமுறையில் உள்ள ஒரு புனிதக் கடமையாகும் (லூக் 7,36-50; 9,51-52; 10,38-42; 19,1-10). சிறப்புமிக்க பண்டைய விருந்தோம்பல்கள் பெரும்பாலும் நிரந்தர நட்பை உருவாக்க உதவுகின்றது. நள்ளிரவில் நண்பனைத் தேடி திடீரென ஒரு விருந்தினர் வருவது விருந்தோம்பலில் ஒரு நெருக்கடியை ஏற்படுத்துகின்றது. இத்தகைய வலிமையான கலாச்சாரங்களில் ஏற்படும் அவமான உணர்வை இந்த உவமை கோடிட்டுக் காட்டுகின்றது. படுக்கையில் இருந்து எழுந்து உதவி செய்ய விரும்பாத பக்கத்துவீட்டு நண்பர், ஓரு எளிய விருந்தோம்பலை தேவையில் இருக்கும் அடுத்திருப்பவருக்கு மறுத்ததற்காக மற்றவர்கள் முன் அடுத்தநாள் அவமானத்தை அனுபவிக்க நேரிடும். எனவே அந்நண்பர் தனிப்பட்ட விருப்பம் அல்லது ஆர்வத்திற்கு எதிராக சரியானதைச் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார். இந்த அவமானம் இப்போது படுக்கையில் இருக்கும் பக்கத்துவீட்டு நண்பருக்கு நேரடியாக கொடுக்கப்பட்ட அழுத்தமல்ல. உதவி கேட்டு வந்த நள்ளிரவு நண்பரால் இந்த அழுத்தம் அவருக்கு உருவாக்கப்பட்டுள்ளது. பக்கத்துவீட்டு நண்பர் எழுந்திருக்கக் காரணம், அவரின் தனிப்பட்ட அவமானத்திற்காக அல்ல; மாறாக வெட்கமின்றி விடாமுயற்சியுடன் தட்டும் நள்ளிரவு நண்பரை வெறுமனே புறக்கணிக்க முடியாத நிலையினால். மேலும், பக்கத்துவீட்டு நண்பர் நள்ளிரவு நண்பரின் கோரிக்கையை மறுப்பது நிச்சயமாக அவரைத் தேடி வந்துள்ள நண்பர் முன் அவனமானத்தை ஏற்படுத்தும்.