Arulvakku

19.10.2019 — Unforgiven Blasphemy

28th Week in Ord. Time, Saturday – 19th October 2019 — Gospel: Lk 12,8-12

Unforgiven Blasphemy

With great confidence, Jesus entrusted his disciples to the care of the Holy Spirit. For in his teaching on prayer, he concluded with the Father’s promise of the Holy Spirit (11,13). This Spirit, whose goal is to lead believers into all truth (Jn 16,13) and remind them of Jesus’ words (Jn 14,26), would be with them when they face hostile forces in the world (Lk 12,11). This Spirit, who is promised to all who believe and are baptized (Acts 2,28-39), would be their one source of strength, wisdom and consolation. In matters of Christian witness, Jesus contrasts those who speak against the Son of man (12,8-9) with those who blasphemy against the Spirit (Lk 12,10). Those who speak against the Son of man speak out of ignorance. They recognize Jesus as mere human created reality. They will be forgiven. However, those who blaspheme against the Spirit speak out of Christian knowledge. They attack Jesus in the source of his divine existence and so they deny the source of their own divine existence. Their blasphemy is a radical rejection of their Christian life and they will never be forgiven. .

இயேசு மிகுந்த நம்பிக்கையுடன் தம்முடைய சீடர்களை தூய ஆவியின் பராமரிப்பில் ஒப்படைக்கின்றார். செபத்தைப் பற்றி போதித்துவிட்டு, முடிக்கும் தருவாயில் தூய ஆவியானவரை தந்தையின் வாக்குறுதியாக குறிப்பிட்டுள்ளார் (11,13). நம்பிக்கையாளர்களை உண்மையின் வழியில் நடத்துவதும் (யோவா 16,13), இயேசுவின் வார்த்தைகளை அவர்களுக்கு நினைவூட்டுவதும் (யோவா 14,26), இவ்வுலகின் தீயசக்திகளை எதிர்கொள்ளும் போதும் அவர்களுடன் உடனிருப்பவர் (லூக் 12,11) இந்த ஆவியானவரே. நம்பிக்கையாளர்களுக்கும் திருமுழுக்கு பெற்ற அனைவருக்கும் (திரு.பணி 2,28-39) வாக்களிக்கப்பட்ட இந்த ஆவியானவர், அவர்களுக்கு வலிமை, ஞானம் மற்றும் ஆறுதல் ஆகியவற்றின் மூலாதாரமாக திகழ்கின்றார். கிறிஸ்தவ சாட்சியங்களில், மானிட மகனுக்கு எதிராகப் பேசுபவர்களை (12,8-9), ஆவிக்கு எதிராக அவதூறு செய்பவர்களுடன்; (லூக் 12,10) முரண்படுத்திக் காட்டுகிறார் இயேசு. மானிட மகனுக்கு விரோதமாகப் பேசுபவர்கள் அறியாமையில் பேசுகிறார்கள். அவர்கள் இயேசுவை வெறும் மனித அவதாரம் எடுத்தவராக அங்கீகரிக்கிறார்கள். அவர்கள் மன்னிக்கப்படுவார்கள். ஆனால், ஆவிக்கு எதிராக நிந்திக்கிறவர்கள் கிறிஸ்தவ ஞானத்திலிருந்து பேசுகிறார்கள். அவர்கள் இயேசுவின் தெய்வீக நிலைக்கான ஆதாரத்தின் மூலத்தையே மறுக்கிறார்கள். இதன் அடிப்படையில் தங்களின் தெய்வீக நிலையையும் மறுக்கிறார்கள். அவர்களின் அவதூறு கிறிஸ்தவ வாழ்க்கையை தீவிரமாக நிராகரிப்பதாகும். அவர்கள் ஒரு போதும் மன்னிக்கப்படமாட்டார்கள்.