29th Week in Ord. Time, Monday – 21st October 2019 — Gospel: Lk 12,13-21
Greed digs emptiness
One of Jesus’ listeners requests him to step into a family dispute about an inheritance. Jesus takes the occasion to teach about the danger of focusing on material wealth. He warns them about greed, and he stresses that “life does not consist in the abundance of possessions”. Jesus reinforces his teaching with a parable about possessions. The parable is full of the pronoun “I”, and the man’s wealth is described as “my crops,”, “my barns”, “my grain”, and “my goods”. . There is no evidence that the rich man was dishonest or corrupt. However, his future perspective is self-centred and self-indulgent. With no thought of his responsibilities before God or the needs of others, the rich man’s security is fleeting. His wealth cannot give refuge and his greed leaves him empty when God demands his life. A truly rich life is one oriented towards God and focused on his will.
இயேசுவின் போதனையைக் கேட்பவர்களில் ஒருவர், தங்களின் பரம்பரை குடும்ப தகராறில் தலையிடும்படி அவரைக் கேட்டுக் கொள்கிறார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பொருட்செல்வத்தில் அதிக கவனம் செலுத்துவதின் ஆபத்தினை பற்றிக் கற்பிக்கிறார் இயேசு. அவர்களுக்கு பேரராசையைப் பற்றி எச்சரிக்கிறார். மேலும், “மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” என்றும் வலியுறுத்துகிறார். அத்துடன் உடைமைகளைப் பற்றிய உவமையுடன் இயேசு தனது போதனையை வலுப்படுத்துகிறார். இந்த உவமையில் “நான்” என்ற தன்முனைப்பு நிரம்பியுள்ளது. மேலும் அவருடைய செல்வத்தினை “என் விளை பொருட்கள்”, “என் களஞ்சியங்கள்”, “என் தானியங்கள்” மற்றும் “என் பொருட்கள்” என்றும் விவரிக்கின்றார். இந்த பணக்காரர் நேர்மையற்றவரோ அல்லது ஊழல்மிக்கவரோ என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், அவருடைய எதிர்கால கனவு சுயநலமானது மற்றும் சுய இன்பம் கொண்டது. கடவுளுக்கு முன்பாக அவர் செய்ய வேண்டிய கடமைகள் அல்லது மற்றவர்களின் தேவைகள் குறித்த எந்த சிந்தனையும் இல்லாததால், பணக்காரனின் வாழ்க்கை உடனே முடிவுக்கு வந்தது. அவருடைய செல்வம் வாழ்வை நீடிக்காது. கடவுள் அவருடைய உயிரைக் கோருகையில் அவருடைய பேரராசை அவரை வெறுமையாக்கியது. உண்மையில் பணக்கார வாழ்க்கை என்பது கடவுளை நோக்கியதாகவும் அவருடைய சித்தத்தை மையமாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.