Arulvakku

22.10.2019 — State of Preparedness

29th Week in Ord. Time, Tuesday – 22nd October 2019 — Gospel: Lk 12,35-38

State of Preparedness

In their attitudes and relationships, Jesus wants his disciples to be alert, ready and watchful. He employs two well-known metaphors to emphasize their state of readiness: to have their loins girt and keep their lamps burning. First metaphor alludes to the state of preparedness required for the Israelites during the first Passover in Egypt (Ex 12,11). This image is used repeatedly in Scriptures, literally or figuratively (1 Kgs 18,46; 2 Kgs 4,29; 9,1; Jer 1,17; Nah 2,1; 2 Mac 10,25; Eph 6,14; 1 Pet 1,13). The long flowing robes of the Middle East are a hindrance to work. When a man is prepared to work he gathers up his robes under his girdle to move swiftly and freely. The second metaphor indicates constant watchfulness (Ex 27,20; Lev 24,2; Mat 25,1). The type of lamp used was like a cotton wick floating in oil. Always the wick had to be kept trimmed and lamp replenished so that light can illumine the darkness. Jesus combines in his teachings these two images to give a warning about the coming judgment. The servants are doubly “blessed” (12,37.38) if they are found watchful and faithful when the Son of Man comes at an unexpected hour.

சீடர்களின் எண்ணங்கள் மற்றும் உறவுநிலைகளில் எச்சரிக்கையுடனும், தயாராகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். எனவே நன்கு அறியப்பட்ட இரண்டு உருவகங்களைப் பயன்படுத்தி அவர்கள் எப்போதும் தயார்நிலையில் இருக்க வலியுறுத்துகின்றார். முதல் உருவகம் – இடையை வரிந்து கட்டிக் கொள்ளுங்கள்; இரண்டாவது உருவகம் – விளக்குகள் எரிந்து கொண்டிருக்கட்டும். எகிப்தில் முதல் பாஸ்கா பண்டிகையின் போது இஸ்ரயேலர் இருந்த ஆயத்த நிலையை முதல் உருவகம் குறிக்கிறது  (விப 12,11). இந்த வர்ணனை மறைநூலில் அடையாளப்பூர்வமாக அல்லது நடைமுறையாக அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது (1 அர 18,46; 1 அர 4,29; 9,1; எரே 1,17; நாகூம் 2,1; 2 மக் 10,25; எபே 6,14; 1 பேதுரு 1,13). மத்திய கிழக்கு பகுதியில் நீண்ட அங்கிகள் வேலை செய்வதற்கு தடையாக இருந்தன. எனவே விரைவாகவும் சுதந்திரமாகவும் செயல்பட ஒருவர் தன் ஆடைகளை இடுப்பில் வரிந்து கட்டிக் கொள்வதுண்டு. இரண்டாவது உருவகம் நிலையான விழிப்புணர்வைக் குறிக்கிறது (விப 27,20; லேவி 24,2; மத் 25,1). இங்கு குறிப்பிடப்படும் விளக்கின் எண்ணெயில் பருத்தி திரி மிதக்கும். திரியை எப்போதும் ஒழுங்கமைக்க வேண்டும் மற்றும் விளக்கினை எண்ணையால் நிரப்ப வேண்டும். இதனால் ஒளி இருளை அகற்றி ஒளிர்ந்திடும். இயேசு தனது போதனையில் இந்த இரண்டு உருவகங்களையம் இணைத்து வரவிருக்கும் இறுதித் தீர்ப்பு குறித்து எச்சரிக்கிறார். மானிடமகன் எதிர்பாராத நேரத்தில் வரும்போது பணியாளர்கள் கவனமுடனும் விழிப்புடனும் காணப்பட்டால்;, அவர்கள் இரட்டிப்பாக “ஆசீர்வதிக்கப்படுவார்கள்” (12,37.38) என்று கூறுகிறார்.