Arulvakku

23.10.2019 — Being responsible stewards

29th Week in Ord. Time, Wednesday– 23rd October 2019 — Gospel: Lk 12,39-48

Being responsible stewards

The parable focuses on the ministry of leadership and responsibility in the community. The disciples are compared to domestic stewards who are charged with various duties over God’s household (12,32; 22,29-30). Their roles of leadership and special service will be judged based on their faithfulness in carrying out this ministry. However, there is the degree of responsibility that has been entrusted to each one in the community (12,48). The distribution of food is singled out as one of their responsibility (Acts 6,1). One who is prudent and faithful in dealing with others will be rewarded with additional responsibilities. He is the leader who has the capacity to recognize the signs of the times and act accordingly. Those who fail in their responsibilities, taking advantage of their position, will be judged harshly. They are those who abuse their fellow servants, who eat and drink, who are careless about the Master’s arrival. These leaders are disobedient, faithless, self-indulgent and negligent in their duties. The servant-leaders of Christ’s church must serve with one eye looking for Jesus’ return and the other searching for ways of carrying out their responsibilities, knowing that they must give an account of their service.

குழுமத்தில் நிலவும் தலைமைத்துவம் மற்றும் பொறுப்புள்ளவரின் மீது கவனம் செலுத்துகிறது இந்த உவமை. கடவுளின் இல்லத்திற்கு செய்ய வேண்டிய பல்வேறு கடமைகளில் சீடர்கள் பணியாளர்களுடன் ஒப்பிடப்படுகிறார்கள். அவர்களின் தலைமைத்துவமும்; சிறப்பு சேவையும் அவர்கள் நிறைவேற்றும் பணியின் உண்மைத்தன்மையின் அடிப்படையில் தீர்ப்பிடப்படும். இருப்பினும், குழுமத்தில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. உணவைப் பகிர்ந்தளித்தல் அவர்களின் பொறுப்புகளில் ஒன்றாகும். விவேகமுடன் மற்றவர்களுடன் பழகுவதில் உண்மையாய் உள்ளவருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். இவரே காலத்தின் அறிகுறிகளை அடையாளம் கண்டு, அதற்கேற்ப செயல்படும் திறமைமிக்க தலைவராவார். தங்கள் கடமைகளில் பொறுப்பற்றவர்கள், தங்கள் தகுதியை சாதகமாக்கிக் கொள்பவர்கள், இவர்கள் கடுமையாக தீர்ப்பிடப்படுவார்கள். அவர்கள் தங்கள் சக ஊழியர்களை தவறாக பயன்படுத்துவார்கள், உண்டு குடித்து மகிழ்வார்கள், தலைவரின் வருகையில் கவனக்குறைவாக செயல்படுவார்கள். இத்தலைவர்கள் கீழ்ப்படியாதவர்கள், நம்பிக்கையற்றவர்கள், சுயநலமிக்கவர்கள் மற்றும் தங்கள் கடமைகளில் அலட்சியமாக உள்ளவர்கள். கிறிஸ்துவின் திருச்சபையில் பணிசெய்யும் தலைவர்கள் தங்களின் ஒரு கண்ணில் இயேசுவின் வருகையை எதிர்நோக்கியும் மற்றொரு கண்ணில் தங்கள் கடமைகளை நிறைவாகச் செய்து கொண்டும் தங்கள் சேவையின் கணக்குப்பதிவை அவர்கள் சமர்ப்பிக்கவேண்டும்.