Arulvakku

12.12.2018 — Burdenless Yoke

*Second Week of Advent, Wednesday — 12th December 2018 — **Gospel: Matthew 11,28-30*
*Burdenless Yoke *
As one who is meek and humble of heart, Jesus personifies the first three beatitudes which address the ‘poor in spirit’, the ‘mourners’ and the ‘meek’ (5,3-5). And He offers one of the most appealing and memorable invitations of the gospel. This invitation is of two fold. First, “Come to me”. Being with Jesus and sharing his life is the way of fulfillment, for they are comforted. Next “Take my yoke upon you and learn from me”. Jesus plays with the two words ‘yoke’ and ‘load’. For the Jews used to call ‘load’ the divine teachings imparted to pupils, and ‘yoke’ the balancing of the teacher’s sentences, which should be learned by heart. Learning from Jesus’ teachings and following him is not burdensome (11,30). His way leads to rest, to his Father, and to the fullness of life.
தாழ்ச்சியும் சாந்தமும் உள்ள இயேசுவின் தனித்துவம் மலைப்பொழிவின் பேறுபெற்றோர்களை நினைவுபடுத்துகிறது. இது இன்றைய நற்செய்தியிலே ஒரு கவர்ச்சிகரமான மற்றும் மறக்கமுடியாத அழைப்பாக அமைந்திருக்கிறது. இவ்வழைப்பின் முதல் கூற்று ‘என்னிடம் வாருங்கள்” என்பது. இயேசுவோடு இணைந்து அவருடைய வாழ்வைப் பகிர்ந்தால் ஆறுதலும் நிறைவும் அடைவோம். மற்றொரு கூற்று ‘என் நுகத்தை ஏற்று என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள்” என்பது. யூத விளக்கம் கொண்ட நுகம், சுமை என்ற இரு வார்த்தைகளை இயேசு இங்கு கையாளுகின்றார். ‘சுமை” என்பது இறைப்படிப்பினை ஏற்றுக்கொள்ளும் மாணவனையும், ‘நுகம்” என்பது சமநிலையோடு போதிக்கும் ஆசானையும் அடையாளம் காட்டுகின்றது. எனவே இயேசுவின் போதனையே ஏற்று கடைபிடிப்பது ஓர் சுகமான சுமை. அவரின் பாதை இறைத்தந்தையிடமும் ஓய்வுக்கும் முழுமையான வாழ்வுக்கும் அழைத்துச் செல்லும்.