Arulvakku

10.01.2019 — Inauguration of the era of fulfilment

*Christmas Weekday, Thursday – 10th January 2019 — **Gospel: Luke 4,14-22*
*Inauguration of the era of fulfilment*
The synagogues are the places where the Jewish people assembled for prayer, Scripture reading, instruction and discussion. It is the natural setting for Jesus to present his teachings. In his hometown of Nazareth, we see an example of the kind of teaching Jesus is offering in the synagogue. He sees his own ministry as a natural completion of Judaism’s hope, so he desires all Jews to enter into this time of fulfilment. In what he read from the scroll of the prophet Isaiah, the anointed Servant of God announces release to all those in bondage (Is 61,1-2). This prophetic deliverance is made specific for four different groups: the poor, the captives, the blind and the oppressed. Their liberation echoes the exodus from Egypt and the return from Babylon, but the era of Jesus would be much greater than the past. Therefore, the Jews of Jesus time began to understand through his reading that the coming of God’s new age of salvation is taking place here and now, before their eyes.
தொழுகைக் கூடங்களில் யூதர்கள் செபத்திற்கும், இறைவார்த்தையை வாசிக்கவும், கற்பிக்கவும், மற்றும் விவாதம் நடத்தவும் கூடிவந்தனர். இயேசு தம் போதனைகளை முன்வைக்க இது ஒரு இயற்கையான அமைப்பாக இருந்தது. அவருடைய சொந்த ஊரான நாசரேத்தூர் தொழுகைக் கூடத்தில் போதிக்கும் போதனை இயேசுவின் போதனைக்கு ஒரு உதாரணமாக அமைகிறது. இயேசு அவருடைய பணியை யூத நம்பிக்கையின் நிறைவாக காண்கிறார். எனவே அவர் எல்லா யூத மக்களும் இந்நிறைவின் காலத்திற்குள் நுழைய வேண்டும் என விரும்புகிறார். இறைவாக்கினர் எசாயாவின் ஏட்டுச் சுருளிலிருந்து வாசித்த பகுதியானது, அருட்பொழிவு செய்யப்பட்ட இறை ஊழியர் அடிமைத்தனத்தில் உள்ள அனைவரையும் விடுவிப்பார் என்பதே. இவ்விடுதலையின் இறைவாக்கு நான்கு விதமான மக்களை குறிப்பிடுகிறது: ஏழைகள், சிறைப்பட்டோர், பார்வையற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோர். அவர்களுடைய விடுதலை எகிப்தில் இருந்து வெளியேறியதையும் பாபிலோனிலிருந்து திரும்பியதையும் எதிரொலிக்கிறது. ஆனால் இயேசுவின் காலம் கடந்த காலத்தைவிட சிறப்பானது. ஆகையால், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் அவருடைய வாசகத்தின் வழியே வரவிருக்கின்ற கடவுளின் மீட்பின் காலம் இங்கே, இப்போது, தங்கள் கண்களுக்கு முன்பாகவே நடந்தேறுகிறது என்று புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.