Arulvakku

11.01.2019 — Jesus’ willingness to heal

*Christmas Weekday, Friday – 11th January 2019 — **Gospel: Luke 5,12-16*
*Jesus’ willingness to heal*
This healing narrative demonstrates the powerful authority of Jesus and his compassionate care for those in need. The man ‘covered with leprosy’ is a person cast out from society because of his impurity. As specified by Leviticus 13-14, a leper is considered unclean and is removed from the ordinary life of the people as long as the disease lasts. Despite these prohibitions, the leper bows before Jesus, addressing him as Lord. He recognizes that God is working through Jesus, and so implores Jesus’ choice to make him clean. The leper’s request centers not on Jesus’ ability, but on his willingness to heal. Finally, the leper both hears and feels Jesus’ willingness to make him whole, and acknowledges the same with the crowds.
இந்த குணமளிக்கும் வர்ணனை இயேசுவின் சக்தி வாய்ந்த அதிகாரத்தையும் தேவையில் உழல்வோருக்கு இரக்கமுள்ள கவனிப்பையும் வெளிப்படுத்துகிறது. தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஓரு மனிதன் அவனது தூய்மையின்மையின் காரணமாக சமுதாயத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். லேவியர் 13-14 அதிகாரங்களில் குறிப்பிட்டுள்ளது போல, தொழுநோயாளன் தீட்டுப்பட்டவராக கருதப்பட்டதால், அவன் நோய் நீடிக்கும் வரை அவனுடைய சமுதாயத்திலிருந்து நீக்கப்பட்டவராக வாழ்வார். இந்த தடைகள் இருந்த போதிலும் இத்தொழுநோயாளி இயேசுவிற்கு முன்பாக ‘ஆண்டவரே’ என அவரது காலில் விழுந்தார். மேலும், கடவுள் இயேசு மூலம் செயல்படுகிறார் என்பதை உணர்ந்திருந்ததால், இயேசுவின் விருப்பப்படி அவரை தூய்மைப்படுத்த வேண்டிக் கொண்டார். இத்தொழுநோயாளியின் வேண்டுகோள் இயேசுவின் திறமையினை அல்ல, மாறாக அவருடைய விருப்பத்தினையே மையப்படுத்துகிறது. இறுதியில், தொழுநோயாளர் தாம் குணம்பெற இயேசுவினுடைய விருப்பதை கேட்கவும், உணரவும் செய்வதோடு, அதை மக்கள் கூட்டத்துடனும் ஒத்துக்கொள்கிறார்.