*2nd Week in Ord. Time, Monday – 21st January 2019 — Gospel: Mark 2,18-22*
*Banquet Inaugurates the Kingdom*
At the time of Jesus, the Jewish people fasted during the times of mourning and repentance and also on the annual Day of Atonement; for it helps to achieve closeness to God. Here Jesus is asked why his group of followers do not fast, while the groups within Judaism, such as the Pharisees and John’s do. In responding with a counter question, Jesus makes an astonishing claim that he is “the bridegroom” and his followers are wedding guests. Jesus uses the occasion to deepen the people’s understanding of his identity and authority; and to recall God’s covenantal love with Israel. The marital imagery was familiar to those who listened to Israel’s prophets (Hos 2,16-20; Is 54,5-6). For example, Isaiah proclaimed, “As the bridegroom rejoices over the bride, so shall your God rejoice over you” (Isa 62,5). In this joyful time of marriage feast, God’s salvation was anticipated and restored through the nuptial bond between himself and his unfaithful people. Now in Jesus’ time, the kingdom of God has been inaugurated like a joyful wedding banquet and salvation will be promised to those who participate in it.
இயேசுவின் காலத்தில் கடவுளுடைய அருளை நிறைவாய் பெறுவதற்காக, யூதர்கள் துக்கம், மற்றும் மனந்திரும்புதல் காலத்திலும் மேலும் வருடாந்திர உபவாச நாட்களிலும் நோன்பு இருந்தனர். பரிசேயர்களும் யோவான் சீடர்களும் நோன்புகளைக் கடைபிடிக்க “ ஏன் இயேசுவின் சீடர்கள் மட்டும் கடைபிடிப்பதில்லை?” என்ற கேள்வியை இயேசுவின் முன் வைத்தனர். அதற்கு இயேசுவே மணமகன் என்றும், அவருடைய சீடர்கள் திருமண விருந்தினர்கள் என்ற வியத்தகு வர்ணனை கொண்டு எதிர் கேள்வி கேட்கின்றார். இச்சூழலை இயேசு தன் அடையாளத்தையும் அதிகாரத்தையும் மக்கள் ஆழமாக புரிந்து கொள்ள பயன்படுத்துகின்றார்; அத்தோடு, இஸ்ரயேலின் உடன்படிக்கை உறவையும் நினைவுபடுத்துகின்றார். இந்த திருமண உருவகத்தை இம்மக்கள் இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள் வழியே அறிந்து கொண்டிருந்தனர். உதாரணமாக, “மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்” என்ற எசாயாவின் இறைவாக்கு. திருமண விருந்தின் மகிழ்ச்சியான இத்தருணம் கடவுளுக்கும் பிரமாணிக்கமற்ற மக்களுக்கும் இடையே உள்ள திருமண உறவை புதுப்பித்து கடவுளின் மீட்பை முன்னறிவிக்கும் உறவு என்பதை மறைமுகமாக எடுத்துக்கூறுகிறார். இப்போது இயேசுவின் காலத்தில், இறையாட்சி ஒரு மகிழ்ச்சியின் திருமண விருந்து போன்று துவங்கியிருக்கின்றது மேலும் அதில் பங்குபெறுபவர்களுக்கு மீட்பின் வாக்குறுதி அளிக்கப்படும்.