Arulvakku

22.01.2019 — Jesus’ Messianic and Royal Identities

*2nd Week in Ord. Time, Tuesday – 22nd January 2019 — Gospel: Mark 2,23-28*
*Jesus’ Messianic and Royal Identities *
On the Sabbath day, the disciples of Jesus were walking in the cornfield. They picked up grain and ate ripe kernels. The stringent interpretation of the Torah by the Pharisees leads them to accuse the disciples of their grain harvesting, which is forbidden on the Sabbath (Ex 34,21). They questioned Jesus for breaking one of the thirty-nine regulations that was prohibited on Sabbath day. By recounting the narrative from 1 Samuel 21,2-7, Jesus highlights his own identity as descendant of David and his authority as the Messiah. If God’s anointed king and his men could eat the bread of the Presence in the meeting tent when they were hungry, then surely Jesus and his disciples could reap from the fields as they go about their mission. The comparison between this incident of David and the acts of Jesus and his disciples concerns not only what is allowable on the Sabbath, but the royal and anointed nature of Jesus’ mission.
ஓய்வுநாளில் இயேசுவின் சீடர்கள் வயல் வெளியில் நடந்து சென்ற பொழுது அருகில் இருந்த முதிர்ந்த தானியங்களைக் கொய்து தின்றார்கள். இச்செயல் ஓய்வுநாளில் தடைசெய்யப்பட்ட செயல் என்பதால் இதை ‘தானிய அறுவடைச் செயல்’ என்று சட்டங்களுக்கு முதன்மை விளக்கமளிக்கும் பரிசேயர்கள் கண்டுணர்ந்தனர். இயேசுவின் சீடர்கள் மேல் கடுமையான குற்றமும் சாட்டினர். எனவே, ஓய்வுநாளில் தடைசெய்யப்பட்ட முப்பத்தி ஒன்பது விதிமுறைகளில் ஒன்றை உடைத்ததற்காக இயேசுவிடம் கேள்வி எழுப்பினர். இயேசு, முதல் சாமுவேல் நூலின் நிகழ்வைச் சுட்டிக் காட்டி, தாமே தாவீது வம்சத்தின் வழித்தோன்றில் என்றும், அவரே அதிகாரமுள்ள மெசியா என்றும் தம் சொந்த அடையாளத்தை எடுத்துரைக்கின்றார். கடவுளால் அர்ச்சிக்கப்பட்ட அரசரும் அவருடைய ஆட்களும் பசியாய் இருந்தபோது தூய அப்பத்தை உண்டது போல, இயேசுவும் அவருடைய சீடர்களும் தங்களுடைய பணியை நிறைவேற்ற வயல் நிலங்களில் தானியங்களைக் கொய்து தின்னலாம் என்று விவரிக்கிறார். தாவீதின் நிகழ்வோடு இயேசுவின் சீடர்களுடைய இந்நிகழ்வை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஓய்வுநாளில் எதை அனுமதிக்கலாம் என்று விளக்கம் கொடுப்பதற்கு மட்டுமல்ல, மாறாக இயேசு தம் பணி வழியாக அவரின் அரச மேன்மையையும் அர்ச்சிக்கப்பட்ட நிலையையும் வெளிப்படுத்துவதற்கே என்று அறிகிறோம்.