Arulvakku

11.02.2019 — Step into every sphere of the society

*5th Week in Ord. Time, Monday – 11th February 2019 — Gospel: Mark 6,53-56*
*Step into every sphere of the Society *
This again is the summary statement of Jesus ministry in the sea and on the land. There are many accounts of Jesus in the sea that begins from 4th chapter onwards and concludes here. Jesus teaches the crowds from a boat on the lake, stills a storm, crosses the sea from one place to another and finally, walks on the water. In this final crossing Jesus and his disciples get out of the lake and walk on the shore. Because of Jesus’ reputation people recognized him and ran towards him. Jesus enters every sphere of Galilean society, and wherever Jesus goes – whether villages, cities, or farms – people bring the sick to him. They carry the sick on mats and lay them in the open areas where vendors offer produce or goods for sale. These marketplaces, the places of political and commercial activity, now become places of encounter with Jesus. Every encounter unfolds God’s boundless blessings to everyone in need.
இப்பகுதி இயேசு கடலிலும் கரையிலும் செய்த பணியினை மீண்டும் இரத்தினச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. கடலோடு இயேசுவை தொடர்புபடுத்தும் பல நிகழ்வுகள் நற்செய்தியின் நான்காவது அதிகாரத்தில் தொடங்கி இங்கே நிறைவு பெறுகிறது. இயேசு படகில் ஏறி மக்களுக்கு போதித்தார், புயலின் சீற்றத்தினை அடக்கினார், கடலின் ஒரு கரையிலிருந்து மறுகரை வரை கடந்தார், மற்றும் அதன் மேல் நடந்தும் சென்றார் என்ற வர்ணனைகளை இவ்வதிகாரங்களில் காணலாம். இந்த இறுதிக்கட்ட நிகழ்வில் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகிலிருந்து இறங்கி கடற்கரை ஓரத்தில் நடந்தார்கள் என்று அறிகிறோம். இயேசுவின் நற்செயல் காரணமாக அவருடைய புகழ் பரவியிருந்ததால் மக்கள் கூட்டம் அவரை அடையாளம் கண்டு கொண்டனர், அவரை நோக்கி ஓடி வந்தார்கள். இயேசு கலிலேய சமுதாயத்தின் எல்லா துறையிலும் கால் பதிக்கிறார். எங்கு சென்றாலும் அதாவது நகரங்கள், கிராமங்கள், அல்லது பண்ணைகள் என்ற பகுதியிலிருந்து நோயுற்றோர் அவரிடம் அழைத்து வரப்பட்டனர். உடல் நலமற்றோர் பாய்களில் கொண்டுவரப்பட்டனர், வீதியோரங்களில் பொருட்கள் விற்பனை செய்யும் திறந்த வெளியில் மக்கள் கிடத்தப்பட்டிருந்தார்கள். இவ்வாறு சந்தைப் பகுதிகள், அரசியல் மற்றும் வர்த்தக நடவடிக்கைள் நடைபெறும் இடங்கள் இயேசுவை நேரடியாக சந்திக்கும் மையங்களாயின. ஓவ்வொரு சந்திப்பும் இறைவனின் எல்லையற்ற ஆசிர்வாதங்களை தேவையில் இருப்போருக்கு வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது.