Arulvakku

13.02.2019 — Indispensable inner purity in Action

*5th Week in Ord. Time, Wednesday – 13th February 2019 — Gospel: Mark 7,14-23*
*Indispensable Inner purity in Action*
Jesus introduces his central teaching in this passage in two ways. First, he calls the crowd to himself, indicating that this is something he wants everyone to hear. “All of you” emphasizes that this is not just immediate audience, but for followers of Jesus in all generations. In a way, Jesus reduced the boundary marks separating Jews and Gentiles. Second, he urges the people to “listen” carefully so that they can understand the full significance of what he is teaching. Then Jesus states his teaching in the form of a proverb (7,15), which the crowd seems to interpret as a rebuke to the customs of the Pharisees. Nevertheless, Jesus actually declares that “all foods are clean”. The implication is that what comes from within a person is far more significant in terms of one’s relationship with God than what kind of food goes into one’s body. As the prophets of the first testament taught, inner purity that comes from the heart is what matters most. The outward observance and the inward meaning are complementary, not contradictory.
இப்பகுதியில் இயேசு இரண்டு விதமாக தம் மைய போதனைகளை அறிமுகப்படுத்துகின்றார். முதலாவதாக, மக்கள் கூட்டத்தினரை தம்மிடம் வரவழைத்து, இதை அனைவரும் கேட்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார். “அனைவரும்” என்று வலியுறுத்துவது உடனிருக்கும் பார்வையாளர்களை மட்டுமல்ல, எல்லா தலைமுறையிலும் இயேசுவை பின்பற்றுவர்களைக் குறிக்கின்றது. மற்றொரு விதத்தில் இயேசு யூதர்களுக்கும் பிறஇனத்தாருக்கும் இடையே வகுக்கப்பட்ட எல்லையைக் குறைத்தார் எனலாம். இரண்டாவதாக, அவர் சொல்வதைப் பற்றிய முழு முக்கியத்துவத்தையும் அவர்கள் புரிந்து கொள்ள கவனமாக “கேட்க” வேண்டுமென்று மக்களை அவர் ஊக்கப்படுத்துகிறார். பின்னர் தம் போதனைகளை ஒரு பழமொழி வடிவில் குறிப்பிடுகின்றார், ஆனால் பரிசேயர்களின் பழக்க வழக்கங்களைக் கண்டிக்கிறார் என்று மக்கள் கூட்டம் விளக்கம் அளித்தனர். இருப்பினும், உண்மையில் இயேசு “எல்லா உணவையும் சுத்தம்” என்றே அறிவிக்கின்றார். இதன் உட்குறிப்பு என்னவென்றால், கடவுளின் உறவுநிலையோடு பார்க்கும் பொழுது எந்த வகையான உணவு ஒருவனின் உடலில் செல்கிறது என்பதை விட, எத்தகைய வார்த்தைகள் அவனிடமிருந்து வெளியே வருகின்றன என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் கற்பித்தது போன்று, இதயத்திலிருந்து வரும் உளத்தூய்மை மிகவும் முக்கியமானது. வெளிப்புற செயல்பாடுகளும் உள்ளார்ந்த எண்ணங்களும் முரண்பாடுகள் அல்ல, மாறாக மனித முழுமையை வெளிப்படுத்துகின்றன.