Arulvakku

18.02.2019 — Arguments that refuse visible signs

*6th Week in Ord. Time, Monday – 18th February 2019 — Gospel: Mark 8,11-13*
*Arguments that refuse visible signs*
This narration is placed between Jesus disembarking and continuing his journey across the sea. Here Jesus is confronted again by a group of Pharisees whose objective is not to discuss but to “argue with him”. They seek from him a validating “sign from heaven” to prove his authority to speak on behalf of God. Although asking for a sign is not necessarily an evil thing (Is 7,10-12), most requests for a sign in the Bible are interpreted as tempting God or putting God to the test as here. Again like the generation of Israelites who journeyed in the wilderness but rebelled against God by refusing to believe in him despite all the signs he worked among them (Num 14,11); so too this generation refuses to put their faith in Jesus Christ, the Son of God. To those whose eyes and ears are closed and whose heart is hardened, nothing can function as a sign, even though the blind now see, the lame walk, lepers are cleansed, the deaf hear, and the dead are raised.
இப்பகுதி இயேசு படகிலிருந்து இறங்கிய பின்னும் மீண்டும் படகில் ஏறி அவரது பயணத்தைத் தொடரும் முன்பும் நடந்த இடைப்பட்ட நிகழ்வாகும். இங்கு இயேசு பரிசேயர்களால் மீண்டும் எதிர்க்கப்படுகிறார், அவர்களுடைய தெளிவான குறிக்கோள் விவாதிக்க அல்ல, மாறாக அவருடன் வாதாடவே. எனவே அவர் கடவுளுடைய அதிகாரத்தோடு பேசுவதை நிரூபிக்க அவர்கள் வானத்திலிருந்து அடையாளம் கேட்கிறார்கள். அடையாளங்களைக் கேட்பது தவறான காரியம் அல்ல, ஆனால் விவிலியத்தில் கேட்கப்படும் அடையளாங்கள் எல்லாம் கடவுளை சோதிப்பதாகவும் அல்லது கவர்ச்சியூட்டுவதாகவும் அமைந்துள்ளது. பாலைவனத்தில் பயணித்த இஸ்ரயேல் மக்கள் கடவுளின் எண்ணற்ற செயல்களை கண்டு நம்ப மறுத்ததும் வணங்கா கழுத்தினராய் இருந்ததும் போல, இம்மக்களும் இறைமகன் இயேசுவின் மேல் நம்பிக்கை வைக்க மறுக்கின்றனர். இம்மக்கள் கண்முன்பாகவே நிகழும் அற்புதங்களான பார்வையற்றோர் பார்ப்பதும், முடவர் நடப்பதும், தொழுநோயாளர் நலம் பெறுவதும், காதுகேளாதோர் கேட்பதும், இறந்தவர் உயிர்பெற்றெழுவதும் போன்ற அடையாளச் செயல்களை ஏற்க மறுப்போர் கண்ணிருந்தும் குருடராவர், காதிருந்தும் செவிடராவர்.