Arulvakku

22.02.2019 — Church on a Rocky Foundation

*6th Week in Ord. Time, Friday – 22nd February 2019 — Gospel: Matthew 16,13-19*
*Church on a Rocky foundation *
There is now a clear distinction and a distance between Jesus opponents and his closest disciples. Matthew distinguishes between the communities of his opponents, which throughout the gospel are called “their synagogues”, and the community of the Jewish followers of Jesus, which he calls the “Church” (*ekklesia*). Now that Simon Peter has announced who Jesus is, Jesus declares who Peter is. Jesus gives him a new name ‘*Petros’* meaning rock, which in effect, bestows upon him a new identity. Jesus affirms that Peter himself is the rock, the sturdy foundation upon which He will construct his Church. As a wise builder and as he has already declared, Jesus wishes to construct his house on this rock (7,24-25). Through Peter’s preaching and leadership within the Church, he will lead people into God’s kingdom. A similar image occurs in Isaiah, where a certain Eliakim is made “master of the household” and given “the keys of the house of David” with the authority to open and shut the gates for those seeking entry into the palace (Is 22,22). As the keeper of the keys, Peter is made the master of Jesus’ household, with the privilege of welcoming people into the Church. With such a firm foundation, the Church will not crumble or fall despite the fiercest of opposition.
இயேசுவின் நெருங்கிய சீடர்கள் மற்றும் எதிரிகள் இடையே ஒரு தெளிவான வேறுபாடும் இடைவெளியும் உள்ளதை மத்தேயு நற்செய்தியில் நாம் காணலாம். நற்செய்தியாளர் எதிரிகளை “அவர்களுடைய தொழுகைக்கூடங்களில்” என்றும், இயேசுவைப் பின்பற்றும் யூதர்களை “திருச்சபை” என்றும் அடையாளப்படுத்துகின்றார். சீமோன் பேதுரு இயேசுவை யார் என்று அறிவித்ததால், இயேசுவும் பேதுரு யார் என்று அறிவிக்கின்றார். இயேசு அவருக்கு ‘பேதுரு’ அதாவது ‘பாறை’ என்ற புதிய பெயரைச் சூட்டி, புதிய அடையாளத்தை அருளுகின்றார். பாறையான பேதுருவே திருச்சபையை கட்டியெழுப்பும் உறுதியான அடித்தளம் என இயேசு இங்கே உறுதிப்படுத்துகின்றார். இயேசு போதித்த சிறந்த கட்டடப் பணியளாரைப் போன்று உறுதியான இப்பாறையில் தனது திருச்சபையையும் எழுப்ப விரும்புகின்றார். பேதுரு தம் போதனையாலும் தலைமைப் பண்புகளாலும் திருச்சபையின் மக்களை இறையாட்சிக்கு வழிநடத்துவார். இதே போன்ற வர்ணனை ஏசாயா நூலில் இடம்பெறுகின்றது. ஆண்டவர் எலியாக்கிமை “வீட்டின் தலைவனாகவும்”, “தாவீது குடும்பத்தின் திறவுகோலை” அவரிடம் கொடுத்து அரண்மனையை திறக்கவும் பூட்டவும் உள்ளே நுழைய விரும்புவோருக்கு அனுமதியளிக்கவும் அதிகாரம் அளிக்கின்றார். இயேசுவின் விண்ணக வீட்டின் திறவுகோலைக் கொண்ட தலைவனாம் பேதுரு திருச்சபைக்குள் மக்களை வரவேற்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கின்றார். இத்தகைய உறுதியான அடித்தளம் கொண்ட திருச்சபை எதிர்ப்புகளிலும் சர்ச்சைகளிலும் வீழ்ச்சியுறாது.