Arulvakku

25.02.2019 — Confront evil spirit after every mountain encounter

*7th Week in Ord. Time, Monday – 25th February 2019 — Gospel: Mark 9,14-29*
*Confront evil spirit after every mountain encounter *
Jesus and the three disciples return from the mountain of Jesus’ glorious transfiguration to a scene of confusion. The scribes argue with the crowd about the man who had brought his son to the disciples for healing. And the disciples were frustrated at their inability to expel the evil spirit from the boy. This demonstrates clearly that the experience of glory is only momentary in the life of disciples. The scene is indicative of the return of Moses from his mountaintop encounter to find faithlessness on the part of Israel (Exod 32). Jesus’ frustrated response to the situation, “You faithless generation, how much longer must I be among you?” expresses more dissatisfaction. His statement confirms that his disciples were not able to minister with faith and power in his absence. Away from the mountaintop, unbelief is a constant risk, and the power of evil must always be confronted. Just as Jesus was revealed at his baptism as God’s beloved Son and then confronted Satan in the wilderness, the revelation of Jesus at the transfiguration is followed by this conflict with an evil spirit.
இயேசுவும் அவருடைய மூன்று சீடர்களும் இயேசுவின் உருமாற்ற மலையிலிருந்து குழப்பமான இடத்திற்கு திரும்பி வருகின்றனர். பேய்பிடித்திருந்த மகனை அவனுடைய தந்தை சீடர்களிடம் குணமளிக்கக் கொண்டு வந்ததை குறித்து மறைநூல் அறிஞர்கள் மக்கள் கூட்டத்தினரோடு வாதாடினர். சீடர்கள் அச்சிறுவனிடமிருந்து தீய ஆவியை வெளியேற்ற இயலாத காரணத்தினால் விரக்தியடைந்தனர். இச்சம்பவம் நமக்குத் தெளிவாகக் காட்டுவது சீடர்களின் வாழ்வில் மகிமையான அனுபவங்கள் மிகவும் குறுகிய காலம் என்பதையே. இக்காட்சி விடுதலைப் பயணநூலில் மோசே தனது இறையனுபவத்திற்குப் பின் மலையிலிருந்து திரும்பி வந்தபொழுது இஸ்ரயேல் மக்கள் நம்பிக்கையில்லாமல் இருந்ததை சுட்டிக்காட்டுகிறது. இதனையே ஆழ்ந்த வியப்புடனும் அதிருப்பதியுடனும் இயேசு “நம்பிக்கையற்ற தலைமுறையினரே, எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும் ?” என்று பதிலளித்தார். இயேசுவின் இந்த அறிக்கை சீடர்கள் அவர்மேல் நம்பிக்கையும் வல்லமையும் இல்லாத நிலையில் எவ்விதப் பணியும் செய்ய முடியாது என்பதை உறுதிப்படுத்துகிறது. மலையனுபவத்திற்கு அப்பால் நம்பிக்கையின்மை என்பது ஒரு நிலையான ஆபத்து, எனவே எப்போதும் தீயசக்தியை எதிர்த்துப் போராட வேண்டும். இயேசுவின் திருமுழுக்கு அனுபவத்தில் இறைவனின் அன்பார்ந்த மகனாக வெளிப்படுத்தியப் பின்பு பாலைவனத்தில் இயேசு சாத்தானை எதிர்கொண்டது போல, இந்த உருமாற்ற வெளிப்பாட்டு அனுபவத்திற்குப்பின் இயேசு தீய ஆவியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.