Arulvakku

26.02.2019 — Continuous misunderstanding of Jesus’ prediction

*7th Week in Ord. Time, Tuesday – 26th February 2019 — Gospel: Mark 9,30-37*
*Continuous misunderstanding of Jesus’ predictions *
As Jesus continues to travel with his disciples through Galilee and towards Jerusalem, he offers his second prediction about his passion. Jesus does not want anyone to know his whereabouts because he is instructing his disciples privately and wants to have their full attention. As with his first announcement (8,31), Jesus’ words are followed by indications that his disciples fail to grasp the most essential elements of being his follower. According to the previous pattern, their misunderstanding and resistance become the occasion for another teaching of Jesus on the intimate connection between who he is and what it means to be his disciple. In the present prediction, the emphasis is on the culpability of all humanity “betrayed into human hand” (9,31), rather than simply the religious leaders. Again, the disciples fail to understand and they argue with one another who is the greatest. As the suffering Messiah, Jesus is determined to carry out the Father’s will, despite the fear, the confusion and the lack of understanding of his followers.
கலிலேயாவிலிருந்து எருசலேம் நோக்கிச் செல்லும் வழியில் இயேசு தம் சீடர்களிடம் இரண்டாம் முறையாக அவருடைய பாடுகளை முன்னறிவிக்கின்றார். தம்முடைய சீடர்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தவும் அவர்களுடைய முழுகவனத்தைப் பெறவும் விரும்பியதால் அவர் எங்கு இருக்கிறார் என்று யாருக்கும் வெளிப்படுத்த விரும்பவில்லை. அவருடைய முதல் அறிவிப்பைப் போன்று இங்கும் இயேசுவின் வார்த்தைகளோடு இணைந்திருக்கின்ற சீடத்துவ அறிவிப்புகளையும் அடிப்படைப் பண்புகளையும் அவருடைய சீடர்கள் புரிந்துக் கொள்ளத் தவறுகின்றனர். முந்தைய பாணியை போன்றே அவர்களுடைய தவறான புரிதல்களினாலும் எதிர்ப்புகளினாலும் இயேசு யார் என்பதையும் சீடத்துவதன்மை என்ன என்பதையும் இணைத்து மீண்டும் போதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த முன்னறிவிப்பில், மதத்தலைவர்களினால் அல்ல, மாறாக, அனைத்து மனித குலத்தினால் தாம் பாடுகளை அனுபவிக்க வேண்டும் என்று இயேசு அவர்களைக் குற்றம் சாட்டுகின்றார். இங்கே சீடர்கள் மீண்டும் இப்போதனையை புரிந்து கொள்ளாமல் தங்களுக்குள் யார் பெரியவர் என்று வாதாடுகிறார்கள். சீடர்களுக்குள்ளே ஏற்படும் குழப்பத்திலும், அச்சத்திலும், புரிந்து கொள்ளா நிலையிலும் இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற தம்மையே அர்ப்பணித்திருந்தார் துன்புறும் மெசியாவான இயேசு.