Arulvakku

01.03.2019 — Oneness is eternal

*7th Week in Ord. Time, Friday – 1st March 2019 — Gospel: Mark 10,1-12*
*Oneness is Eternal *
Some Pharisees come to Jesus with a question designed to entrap Jesus: “Is it lawful for a man to divorce his wife?” Behind this question lay the dangerous political issue of Herod’s marriage to Herodias, who had divorced her husband to marry him. John the Baptist’s criticism of this marriage had ended in his beheading, so the Pharisees thought this might be an easy way to ensnare Jesus. However, Jesus demonstrates that their focus on what God allows due to the hardness of the human heart is misguided. Jesus states that God’s original intention for marriage should be the centre of their attention. The divine purpose is best expressed in the creation accounts, describing their oneness. This communion of love between a husband and wife points to God’s ultimate purpose in creating humanity in his image. When Jesus adds “what God has united, humans must not divide”, he means that marriage is an eternal covenant and not to be violated at any cost. Jesus invites people to build their families to grow in love, compassion, understanding and faithfulness. With the coming of God’s kingdom, human family has been given a new power to experience and live what God intended from the beginning.
பரிசேயர்கள் சிலர் இயேசுவை அணுகி “ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்வது நியாயமா?” என்ற கேள்வியோடு சோதித்தனர். இந்த கேள்வியின் பின்னணியில் ஏரோதியாள் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு ஏரோதை மணந்த ஆபத்தான அரசியல் பிரச்சனை உள்ளது. திருமுழுக்கு யோவான் இந்தத் திருமணத்தை விமர்சித்ததால் அவரது தலை வெட்டப்பட்டது. எனவே பரிசேயர்கள் தம் வலையில் இயேசுவை சிக்கவைக்க இதுவே எளிய வழி என்று நினைத்தார்கள். இருப்பினும் மனித இதயத்தின் கடினத்தன்மை காரணமாகத் தான் கடவுள் அனுமதித்தார் என்ற நோக்கத்தை இயேசு நிரூபிக்கின்றார். திருமணத்திற்கான கடவுளுடைய உண்மை நோக்கமே ஆண் பெண் இருவரும் மையப்படுத்தப்பட வேண்டும் என்பதை இங்கு இயேசு வலியுறுத்துகின்றார். இருவரும் இணைந்திருப்பதே திருமணத்தின் தெய்வீக நோக்கம் என்பதைப் படைப்புக் கதைகளும் வெளிப்படுத்துகின்றன. மனிதனைத் தம் சாயலாகப் படைத்த இறைவனின் இறுதி நோக்கம் அன்பில் கணவனும் மனைவியும் இணைந்திருக்க வேண்டுமென்பதே. “கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்கக் கூடாது” என்ற இயேசுவின் கூற்று திருமணத்தின் முடிவுறா உடன்படிக்கையை எந்த நிலையிலும் மீறக்கூடாது என்று அர்த்தம் பெறுகிறது. மாந்தர் அனைவரும் தங்கள் குடும்பங்கள் அன்பு, இரக்கம், புரிதல், மற்றும் நம்பிக்கையில் நாளும் வளர இயேசு அழைக்கின்றார். இறையரசின் வருகையினால், மனித குடும்பம் தொடக்கத்திலிருந்தே இறைவன் நினைத்ததை அனுபவித்து வாழ புதிய வல்லமையை பெறுகிறது.