Arulvakku

03.03.2019 — Be pure in mind and spirit

*8th Sunday in Ord. Time – 3rd March 2019 — Gospel: Luke 6,39-45*
*Be pure in mind and spirit *
The sermon on the plain concludes with a series of parabolic lessons in which Jesus challenges his disciples to take his words seriously and to examine their own lives in the light of his teachings. Luke gives a different meaning to these sayings by referring to one’s pure conscience. The images are all in pairs: the teacher and the disciple; the speck in the neighbour’s eye and the log in one’s own eye; the good and the bad tree; and the good and the evil person. Through these images, Jesus urges his followers to be hesitant to judge and condemn others and be quick to forgive and show mercy. Each of these illustrations challenge the readers to make a right choice; a choice that is not difficult if one sees what is at stake. The proverb about the blind leading the blind demonstrates that a teacher needs clear vision before leading others in the way. Before we can be qualified to help others, we must look at ourselves first. When we see clearly, we are able to deal sensitively with others and serve them with truth and compassion. The images of the good and the bad trees illustrate how the fruit that we produce in life reflects what is at the core of our being. Each good person purifies his mind and spirit to become the tree that produces good fruits. The words and the deeds that we express indicate the spiritual condition of our lives.
சமவெளி போதனையின் இந்த இறுதிப்பகுதி இயேசுவின் படிப்பினைகளை உள்ளடக்கிய உவமைகளின் தொடர்ச்சியாகும். இப்போதனையின் வெளிச்சத்தில், இயேசு தம் சீடர்களிடம் அவருடைய வார்த்தைகளை தீவிரமாக உள்வாங்கவும், தங்களின் வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கவும் சவால்களை முன்னிறுத்துகின்றார். நற்செய்தியாளர் லூக்கா இக்கூற்றுகளுக்கு தூய மனசாட்சியை கோடிட்டுக்காட்டுவதன் மூலம் ஒரு வித்தியாசமான விளக்கத்தைத் தருகின்றார். இங்கு குறிப்பிட்டுள்ள வர்ணனைகள் அனைத்தும் சோடிகளாக உள்ளன: ஆசிரியர் மற்றும் சீடர்; கண்ணில் மரக்கட்டை மற்றும் கண்ணில் துரும்பு; நல்ல மரம் மற்றும் கெட்ட மரம்; நல்லவர் மற்றும் கெட்டவர். இந்த உருவங்களின் வழியே தம் சீடர்கள் மற்றவர்களை தீர்ப்பிடவும் குற்றஞ்சாட்டவும் தயக்கம் காட்டிடவும், உடனடியாக இரக்கம் காட்டி மன்னிக்கவும் இயேசு தூண்டுகின்றார். இந்த எடுத்துக்காட்டுகள் ஒவ்வொன்றும் வாசிப்பவரை சரியான தேர்வு செய்ய சவால் விடுக்கின்றன. இதில் உள்ள ஆபத்தினை உணர்ந்து கொண்டால் தேர்வு செய்வது கடினமாகாது. பார்வையற்றவர் மற்றொரு பார்வையற்றவரை வழிநடத்தும் பழமொழி ஒர் ஆசிரியர் மற்றவர்களை வழிநடத்துவதற்கு முன் தெளிவான பார்வை பெற்றிருக்க வேண்டும் என்பதை நிரூபிக்கிறது. மற்றவர்களுக்கு உதவி செய்யும் முன் நமக்குள்ள தகுதியை முதலில் பார்க்க வேண்டும். நாம் தெளிவாகக் காணும் போது, மற்றவர்களின் உணர்ச்சியை புரிந்து கொண்டு உண்மையோடும் இரக்கத்தோடும் அவர்களை நடத்துவோம். நம் வாழ்வில் செயல்களாக உருவாக்கும் கனிகள் நம்முடைய உள்மனத்தின் செயல்களை பிரதிபலிக்கின்றன என்பதை நல்லமரம் மற்றும் கெட்ட மரத்தின் உருவகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. நல்லவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் தூய்மையான எண்ணங்களாலும் தூண்டுதலாலும் நல்ல கனியினை கொடுக்கும் மரமாக மாறுகின்றார்கள். நம்முடைய வார்த்தைகளும் செயல்களும் நம் ஆன்மீக வாழ்வின் நிலையை பிரதிபலிக்கின்றன.