Arulvakku

04.03.2019 — Letting go ‘one thing’ for many

*8th Week in Ord. Time, Monday – 4th March 2019 — Gospel: Mark 10,17-27*
*Letting go ‘one thing’ for many *
The man who runs up and kneels before Jesus clearly has an urgent question burning in his heart. He has lots of possessions and got himself trapped in an illusion of the worldly security of power and money instead of eternal security of God. The various expression used in this passage – “inheriting eternal life” (v.17), “having treasure in heaven” (v.21), “entering the kingdom of God” (v.23), and “being saved” (v.26) – are all different ways of expressing the fullness of life that Jesus has come to give to those who choose to receive it. The man has been faithful to the commandments of the Lord and devotedly follows them from his childhood. Yet, his righteous life could not merit him eternal life. Jesus recognizes that the ‘one thing’ the man lacks is detachment from his “many possessions” (vv.21-22). He lacks total dependence on God alone, who gives eternal security for ever. The cost of discipleship demands, the cost of letting go of that ‘one thing’, which many of us consider more valuable than holding on to God completely.
இயேசுவிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு மண்டியிட்டவரின் இதயத்தில் ஒர் இன்றியமையாத கேள்வி கணன்று எரிந்தது. அவரிடம் நிறைய உடைமைகள் இருந்ததால் இறைவனின் நித்திய பாதுகாப்பை உணராமல், பணம் மட்டுமே இவ்வுலக வாழ்வின் பாதுகாப்பு மற்றும் சக்தி என்ற மாயையில் சிக்கி வாழ்ந்து வந்தார். ஆனால், இப்பகுதியில் முழுமையான வாழ்வை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்தும் நான்கு வசனங்கள் இயேசுவை நம்பி ஏற்றுக் கொண்டவர்களுக்கு வழங்கப்படுகின்றது: “ நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள” (10,17); “விண்ணகத்தில் செல்வராய் இருப்பீர்” (10,21); “இறையாட்சிக்கு உள்நுழைவது” (10,23); மற்றும் “யார் மீட்புப் பெறமுடியும்” (10,26). இந்நிகழ்வின் கதாநாயகன் இறைவனின் கட்டளைகளை நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் குழந்தைப் பருவத்திலிருந்தே கடைபிடித்து வந்திருந்தான். ஆயினும், அவனுடைய நேர்மையான வாழ்வு அவன் விரும்பிய நித்திய வாழ்விற்கு அவனை தகுதியாக்கவில்லை. அம்மனிதனிடம் “ஏராளமான சொத்துக்களிலிருந்து” இழக்க முடியாத பற்று “ஒன்றே குறைபாடு” என்பதை இயேசு கண்டுணர்ந்தார். நித்திய பாதுகாப்பை வழங்கும் இறைவன் ஒருவரிலே அவன் முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதே அது. நம்மில் அநேகர் கடவுளிடம் முழுமையாக நம்பிக்கை கொள்ளாமல் மிகுந்த மதிப்பு வாய்ந்தது என்று கருதும் அந்த “ஒரு காரியத்தினை” விட்டுக் கொடுக்கத் தயங்குவதே நம் சீடத்துவத்திற்கான சவால்.