Arulvakku

05.04.2019 — God’s reversal for the renounced

*8th Week in Ord. Time, Tuesday – 5th March 2019 — Gospel: Mark 10,28-31*
*God’s reversal for the renounced *
In contrast to the rich man’s failure to return i.e., to give up all and to follow Jesus (10,22), Peter asserts that the disciples have done just that (10,28). In the beginning, the rich man came with great hope seeking certain inheritance from Jesus, but towards the end he leaves Jesus with shock and grief. The request of Peter brings in promising rewards for his disciples here and now and in the eternal future. At the same, these promises help the disciples to escape the verdict that Jesus has rendered against the rich (10,23-28). The reward for those who give up all for the kingdom of God puts forth a higher vision of larger purpose. Salvation comes not through human effort or meritorious work, but rather through the renunciation of self and dependence on God. In that, the disciples of Jesus are in a privileged position to anticipate the bountiful “family life” that is experienced within Christian community. And there are instances where voluntary renunciation undertaken for the sake of God’s kingdom reverses the situation (10,31) in the present and in the eschaton. The parable of the rich man and Lazarus (Lk 16,19-31) articulates the reversal in the future, while Mary’s Magnificat pronounces at the present (Lk 1,52). Paul makes it plain that at the eschatological judgement, God turns upside down what is wise, powerful and noble in the eyes of the world into foolish, weak, and despised (1 Cor 1,26-29).
எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவிடம் திரும்பிவரத் தவறிய பணக்காரனுக்கு பதிலாக இயேசுவின் சீடர்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள் என்று பேதுரு வலியுறுத்துகின்றார். தொடக்கத்தில் செல்வந்தன் இயேசுவிடமிருந்து உன்னத சொத்தை பெற மிகுந்த நம்பிக்கையுடன் வந்தான், ஆனால், இறுதியில் அவன் அதிர்ச்சியோடும் துக்கத்தோடும் இயேசுவை விட்டு விலகிச் சென்றான். பேதுருவின் வேண்டுகோள் இயேசுவின் சீடர்களுக்கு இங்கு, இப்பொமுது மற்றும் நிலைவாழ்வில் உறுதியளிக்கும் வெகுமதியை அளிக்கிறது. அதே சமயத்தில் இவ்வாக்குறுதிகள், செல்வந்தவர்களுக்கு எதிரான இயேசுவின் தீர்ப்பிலிருந்து தப்பிக்க சீடர்களுக்கு உதவுகின்றன. இறையாட்சிக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுப்பவர்களுக்கான நன்மதிப்பு மிக உயர்ந்த, உன்னத நோக்கத்தை முன்வைக்கிறது. மீட்பு என்பது மனித முயற்சிகளால் அல்லது பாராட்டக்கூடிய செயல்களினால் அல்ல, மாறாக கடவுள் சார்பு கொண்டிருப்பதும், சுயத்தை இழப்பதிலும் அடங்கியிருக்கிறது. இதில் இயேசுவின் சீடர்கள் பரந்துபட்ட கிறிஸ்தவ சமுதாயத்தில் அபரிமிதமான “குடும்ப வாழ்வில்” இணையும் சிறப்பு அந்தஸ்தை பெறுகிறார்கள். இறையாட்சிக்காக மனமார துறக்கும் நிகழ்வுகளில் தலைகீழ் மாற்றங்களை தற்போதும் நிலைவாழ்விலும் காணலாம். எதிர்காலத்திய தலைகீழ் மாற்றத்தை ஏழை லாசர் மற்றும் செல்வந்தரின் உவமையிலும், தற்போதை தலைகீழ் மாற்றத்தை மரியாளின் புகழ்ச்சிப் பாடலில் காண்கிறோம். பவுல் அடியாரும் இவ்வுலகப் பார்வையில் ஞானமுள்ள, வலிமைமிக்க, மற்றும் உன்னத காரியங்களை கடவுள் தம் வல்லமையினால் புரட்டிப்போடுவதாக அதாவது முட்டாள்தனமான, பலவீனமான, மற்றும் வெறுக்கப்படும் காரியங்களாக மாற்றுகிறார் என்ற இறுதிக்கால தீர்ப்பைத் தெளிவுப்படுத்துகின்றார்.