Arulvakku

06.03.2019 — Genuine Intention in our practices

*Ash Wednesday – 6th March 2019 — Gospel: Mt 6,1-6.16-18*
*Genuine Intention in our practices *
The gospel focuses on three traditional acts of Jewish piety that lead our life towards God: almsgiving, prayer, and fasting. Almsgiving is an effort to grow in love with the other. Prayer gives personal direction to turn to God and His Word. Fasting is a practice of self-emptying and purifying oneself. These are the exceptional means to make up for all our past failures. Jesus does not criticize the practices themselves but warns against the hypocrisy and world-mindedness. As in his previous teachings on the Torah, he challenges his hearers to probe the deepest reasons for the acts and to consider the internal dispositions from which the external practices arise. These practices are relevant even today to reaffirm our relationship with God, divesting ourselves from self-love, self-will and self-interests, so as to extend our love and service to the poor, the marginalized and less privileged more freely and generously. God rewards those who keep their actions private (vv.4 & 6 & 18); and it is the way to walk steadfastly and unwaveringly in His path. What is emphasized here is our genuine intention and inner spirit to all forms of our spiritual practices.
கடவுளை நோக்கி முன்னேறத் துணை நிற்கும் மூன்று யூத பாரம்பரிய செயல்களான தர்மம், செபம், நோன்பு இவற்றில் இன்றைய நற்செய்தி கவனம் செலுத்துகிறது. பிறரன்பில் வளர தர்மத்தினையும், இறைவனுடனும் அவருடைய வார்த்தையிலும் இணைந்திட செபத்தினையும், தம்மையே தூய்மைப்படுத்த நோன்பினையும் கடைபிடிக்க வேண்டும். இம்முயற்சிகள் நம் கடந்த கால தோல்விகளைக் களைந்து சிறப்பாய் நாளும் வளர உதவும் அற்புதமான வழிமுறைகள். இயேசு இந்த நடைமுறைகளை விமர்சிக்க இங்கு குறிப்பிடவில்லை; மாறாக, இவற்றின் வெளிவேடங்களுக்கும் உலக மனப்பான்மைக்கும் எதிராக எச்சரிக்கை விடுக்கிறார். தோராவை தொடர்புபடுத்திய முந்தைய போதனைகளைப் போலவே இங்கும் அவருடைய போதனையை கேட்போருக்கு சவால் விடுக்கிறார். அதாவது, ஒவ்வொரு வெளிப்புற செயல்களிலும் உள்ளார்ந்த காரணங்களை ஆராயவும், உள்நோக்கங்களை கருத்தில் கொள்ளவும் வேண்டும் என்பதே அச்சவால். இவ்வழிமுறைகள் இன்றும் பொருத்தமானவை. காரணம், சுய அன்பு, தன்னிறைவு, சுயநலம் இவற்றிலிருந்து நம்மை களையவும், சமுதாயத்தில் உள்ள ஏழைகள், ஒதுக்கப்பட்டோர் மற்றும் சலுகையற்றோருக்கு நமது அன்பையும் சேவையையும் சுதந்திரமாகவும் தாராளமாகவும் விரிவுபடுத்தி இறையுறவை மீண்டும் உறுதிப்படுத்த உதவுவதாகும். மறைவாய் செய்யும் காரியங்களுக்கு இறைவன் வெகுமதி அளிக்கிறார். இதுவே அவருடைய பாதையில் உறுதியுடனும் தயக்கமின்றியும் நடப்பதற்கான வழியாகும். நமது ஆன்மீக வழிமுறைகளின் அனைத்து வடிவங்களுக்கும் நம் உள்ளார்ந்த எண்ணமும் தூய ஆவியின் தூண்டுதலும் இங்கே வலியுறுத்தப்படுகின்றது.