Arulvakku

08.03.2019 — Fasting brings God’s kingdom to fulfilment

*Friday after Ash Wednesday – 8th March 2019 — Gospel: Mt 9,14-15*
*Fasting brings God’s kingdom to fulfilment *
The question asked of Jesus about fasting seems to concern the frequency and motivation for fasting, not the practice itself. He did not tell the disciples of John, ‘actually, we do fast, except that you do not know about it. I started my mission by fasting 40 days’. Jesus’ response that he and his disciples do not “fast often” refers to the biblical image of the Jewish wedding feast. The prophets applied marriage imagery to the relationship of God and Israel, and they used the image of the banquet to express the fulfilment of Israel’s hopes. Here Jesus is portrayed as the “bridegroom” of fulfilment with the joyful messianic banquet. Fasting, as a weapon to fight and to transform within and without have many examples, the fasting of Moses for forty days for the unfaithfulness of Israelites, the fasting of the people of Nineveh, the fasting of Jesus before announcing and inaugurating God’s kingdom. At the present time, the disciples of Jesus need to solicit God’s special grace by fasting and praying as we carry out the work of bringing God’s kingdom to fulfilment.
நோன்பைப் பற்றி இயேசுவிடம் முன்வைக்கும் கேள்வியில் எவ்வாறு அது கடைபிடிக்கப்படுகிறது என்பதல்ல; மாறாக, எத்தனை முறை கடைபிடிக்கப்படுகிறது, அதன் உள்நோக்கம் என்ன என்று அறிவதே. இயேசுவும் அவருடைய சீடரும் நோன்பை கடைபிடிக்கிறார்கள் குறிப்பாக அவருடைய பணியை தொடங்கும் முன் 40 நாட்கள் நோன்பிருந்தார் என்பதை யோவானின் சீடர்களுக்குச் இயேசு சுட்டிக்காட்டவில்லை. யூதர்களின் திருமண விருந்தை விவிலிய அடையாளமாகக் குறிப்பிட்டு இதனால் அடிக்கடி நோன்பிருப்பதில்லை என்று இயேசு பதிலளிக்கின்றார். இறைவாக்கினர்கள் ‘திருமண’ உருவகத்தை இறைவனும் இஸ்ரயேல் மக்களும் கொண்டுள்ள உறவோடு இணைத்து பயன்படுத்தினர்; இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கையை நிறைவேற்றுவதற்கு ‘விருந்து’ உருவகத்தைப் பயன்படுத்தினர். இங்கு மெசியாவின் மகிழ்ச்சியான விருந்தை நிறைவு செய்யும் ‘மணமகன்’ இயேசு என்று வர்ணிக்கின்றார். நோன்பு என்பது நமக்குள்ளேயும் வெளியேயும் நடைபெறும் மாற்றத்திற்கான போராட்டத்தில் வெற்றி பெற உதவும் ஆயதமாகும். எடுத்துக்காட்டாக, நம்பிக்கையற்ற இஸ்ரயேல் மக்களுக்காக மோசேவும், நினிவே மக்கள் மனமாற்றத்திற்காகவும், இயேசு இறையாட்சியை தொடங்கவும் அறிவிக்கவும் நாற்பது நாட்கள் நோன்பினை கடைபிடித்தார்கள். இன்றைய காலகட்டத்தில் இறையாட்சியை முழுமையாக்க தொடர்கின்ற பணியில் இயேசுவின் சீடர்கள் இறைவனின் சிறப்பு அருளுக்காக செபிக்கவும் நோன்பிருக்கவும் வேண்டும்.