Arulvakku

10.03.2019 — Keep his commandments in your heart

*1st Sunday of Lent – 10th March 2019 — Gospel: Lk 4,1-13*
*Keep his commandments in your heart*
Filled with the Holy Spirit and led by the Spirit to the place of testing, Jesus overcomes the evil he faces by his reflective application of the truths of Scripture. The testing of Jesus in the wilderness (4,1-13) introduces major topics from Deuteronomy 6 & 8. The forty years of ‘God’s testing of Israel’ in the wilderness (Deut 8,2) reconfigures into forty days in which “Jesus ate nothing” (Lk 4,2). And God makes his purpose of testing very clear, “in order to humble you, testing you to know what was in your heart, whether or not you would keep his commandments” (Deut 8,2). This sets the stage for Jesus to “know by heart” the verses from Deut 6 and 8 so that he can recite them to the devil and resist its challenges. When he is tempted to provide food for himself from a stone, Jesus counters with a quote from Deut 8,3, reminding Israel to trust in God’s faithfulness and protection. When the devil offers to give Jesus all the wealth and power of the world’s kingdoms in exchange for Jesus’ allegiance to him, Jesus replies with Deut 6,13, commanding God’s people to worship and serve Him alone. Finally, when Jesus is tempted to demonstrate his power by casting himself down from the temple, making a flashy display of his power and glory, Jesus responds with Deut 6,16, “Do not put the Lord your God to the test” (Deut 6,16). In these testing, Jesus enacts the attributes of “knowing in one’s heart, remembering, and keeping” the commands which God gave to Israel in their wilderness (Deut 6,16; 8,2; 8,16). His response to the devil evokes the necessity not to exalt oneself but to humble oneself before God who gives food, progeny, and wealth to God’s people. Jesus also recontextualizes what it means to “observe the commands diligently” (Deut 6,1 & 3). Since He “loves the Lord his God with all his heart, soul, and mind,” Jesus refuses to bow down and worship the devil, and he refuses to test God by throwing himself off the temple. But exhibits that he has God’s decrees and statutes ever in his heart, and abides by the Scripture at every moment of his life.
இயேசு தூய ஆவியினால் நிரப்பப்பட்டு, சோதனை நடைபெறும் இடத்திற்கு ஆவியால் வழிநடத்தப்படுகிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் தீமைகளை இறைவார்த்தையின் மூலம் உண்மையினை பிரதிபலித்து வெற்றி கொள்கிறார். இயேசுவின் பாலைவன சோதனைகள் இணைச்சட்டம் 6 மற்றும் 8-ம் அதிகாரத்திலிருந்து முக்கிய தலைப்புகளை அறிமுகப்படுத்துகின்றது. இஸ்ரயேல் மக்கள் பாலைவனத்தில் நாற்பது ஆண்டுகள் சோதிக்கப்பட்டது இயேசு நாற்பது நாட்கள் எதுவும் சாப்பிடாமல் இருந்ததோடு ஒத்துப்போகிறது. இணைச்சட்டத்தில் இறைவன் சோதிப்பதின் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகின்றார்: “எளியவராக்கவும், எல்லா வழிகளையும் நினைவில் கொள்ளவும், கட்டளைகளை நீங்கள் கடைப்பிடிப்பீர்களோ மாட்டீர்களோ என உங்கள் உள்ளச் சிந்தனையை அறிந்து கொள்ளவும் சோதித்தார்.” இதன் பின்னணியில் இணைச்சட்டம் 6 மற்றும் 8-ம் அதிகாரங்களை இயேசு “இதயத்தில் பதித்துள்ளார்” என்று அறிகிறோம். எனவே அவர் அலகையின் சோதனையில் இவ்வசனங்களைப் பயன்படுத்தி அதன் சவால்களை எதிர்த்தார். அலகை அவரிடம் ஒரு கல்லை உணவாக கொடுக்க ஆசைப்படுகையில், இயேசுவோ இஸ்ரயேல் மக்கள் இறைவனிடம் முழுமையான பாதுகாப்பையும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் இணைச்சட்டம் 8>3 நினைவு கூர்ந்து மறுக்கின்றார். இயேசு அலகையை வணங்கினால் இவ்வுலக அரசுகளையும் அதில் உள்ள செல்வத்தையம் அதிகாரத்தையும் கொடுப்பேன் என்ற சவாலை முன்வைக்கும் போது, இயேசு மீண்டும் இறைவனின் மக்கள் இறைவனுக்கு மட்டுமே வணக்கமும் பணிவிடையையும் செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் இணைச்சட்டம் 6>13 முன்வைக்கின்றார். இறுதியாக, எருசேலேம் ஆலய உச்சியிலிருந்து குதித்து அவருடைய வல்லமையையும் மகிமையையும் வெளிப்படுத்த சோதிக்கும் போது, இயேசு இணைச்சட்டம் 6>16 குறிப்பிட்டு “கடவுளாகிய ஆண்டவரை சோதியாதே” என்று பதிலளிக்கின்றார். இச்சோதனைகளில், இஸ்ரயேல் மக்களுக்கு பாலைவனத்தில் இறைவன் தந்த கட்டளைகளை இயேசு தம் “இதயத்தில் அறிந்து, நினைவுகூர்ந்து, கடைபிடித்தார்” என்ற மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. அலகைக்கு தந்த இயேசுவின் பதிலில், இறைவன் தம் மக்களுக்கு தரும் உணவையும், சந்ததியையும், செல்வத்தையும் கொண்டு இறைவனுக்கு முன்பாக தம்மையே உயர்த்திக் கொள்ளாமல், தாழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதே இங்கு மிளிர்கின்றது. இயேசுவின் நடவடிக்கைகளில் இறைவனின் கட்டளைகளை எவ்வாறு விடாமுயற்சியுடன் கடைபிடிக்க வேண்டும் என்பது இங்கு மறுசீரமைக்கப்படுகின்றது. இயேசு கடவுளை முழுஇதயத்தோடும், முழுஆன்மாவோடும், முழுமனத்தோடும் நேசிக்கின்றதால், அலைகையை பணிந்து வணங்க மறுக்கின்றார்; கடவுளை சோதிக்க விரும்பாததால், ஆலயத்தின் உச்சியிலிருந்து குதிக்க மறுக்கின்றார். ஆனால், கடவுளுடைய கட்டளைகளையும் விதிமுறைகளையும் அவரது இதயத்தில் எப்போதும் இருத்தி, அவரது வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் இறைவார்த்தையின் படி வாழ்கின்றார்.