Arulvakku

12.03.2019 — God’s Kingdom anticipated in Prayer

*1st week in Lent, Tuesday – 12th March 2019 — Gospel: Mt 6,7-15*
*God’s Kingdom anticipated in Prayer *
The Lord’s Prayer describes the inner attitudes that motivate the true disciple. Jesus prefaces this prayer with the remark that the ‘Father knows what we need before we ask’. Jesus then demonstrates his intrinsic desire to share his personal relationship with God as Father. It is a prayer that comes from the heart of Jesus that is thoroughly Jewish. This prayer of Jesus highlights the prayer of praise, contrition and petition. It contains seven petitions: the first three focus on God’s holy Name, His Kingdom and his Will (vv.9,10) which indicate the acceptance of the primacy of God in our life. The next four ask God to help us with our human needs for sustenance (physical and spiritual), forgiveness (received and given), strength in the face of temptations (within and without) and protection from evil (vv.11-13). Once again Jesus emphasizes here as always on God’s kingdom and his entire prayer anticipates its coming here on earth. We pray that God will bring about the fullness of the kingdom in the future, while we ever live in the present in accord with the vision of God’s reign among us. The expectation of future fullness leads to present ethical requirements. While we hope for the future kingdom, we pray for the practical and urgent needs we find as we live in a world not yet fully conformed to God’s will.
உண்மை சீடனை ஊக்குவிக்கும் உள்ளுணர்வுகளை “ஆண்டவரை நோக்கிய செபம்” விவரிக்கின்றது. “நாம் கேட்கும் முன் நமக்குத் தேவையானதை இறைத்தந்தை அறிந்திருக்கிறார்” என்ற முன்னுரையோடு இயேசு இச்செபத்தைத் தொடங்குகின்றார். தொடர்ந்து தந்தை இறைவனோடு தனிப்பட்ட உறவைப் பகிர்ந்து கொள்வதற்கான அவரது உள்ளார்ந்த விருப்பத்தை வெளிப்படுத்துகின்றார். இச்செபம் இயேசுவின் இதயத்திலிருந்து வந்தாலும் முற்றிலும் யூதப் பின்னணியைக் கொண்டதாகும். இயேசுவின் இச்செபம் புகழ், மனவருத்தம், விண்ணப்பம் ஆகிய சிறப்பு அம்சங்களை உட்கொண்டுள்ளது. இதில் ஏழு விண்ணப்பங்கள் உள்ளன: முதல் மூன்று இறைவனின் தூய நாமத்தையும், இறையாட்சியையும், அவரது திருவுளத்தையும் குறிக்கின்றன. இதன் வழியாக நம் வாழ்க்கையில் இறைவனை முதன்மையாக ஏற்றுக் கொள்வதை சுட்டிக் காட்டுகின்றது. மற்ற நான்கும் மனிதத் தேவைகளுக்காக (உடல் மற்றும் ஆன்மீகம்), பாவ மன்னிப்புக்காக (பெறுதல் மற்றும் கொடுத்தல்), சோதனைகளை எதிர்கொள்ள வேண்டிய சக்திக்காக (உள்ளே மற்றும் வெளியே), மற்றும் தீமையிலிருந்து பாதுகாக்க இறைவனின் உதவியை கோருவதாகும். எப்பொழுதும் இறையாட்சியை வலியுறுத்தும் இயேசு மீண்டும் இச்செபத்தின் வழியாக இறையாட்சியை இவ்வுலகில் நனவாக எதிர்நோக்குகின்றார். இறைவனின் இறையரசுக் கனவை இவ்வுலக வாழ்வில் ஒவ்வொரு நாளும் வாழ்கின்ற அதே வேளையில், நாம் எதிர்நோக்கி இருக்கும் இறையாட்சியின் முழுமையை நம் செபத்தின் வழியே இறைவன் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை வெளிப்படுகிறது. வருங்கால முழுமையின் எதிர்பார்ப்பு இன்றைய அறநெறி வாழ்வையும் முன்வைக்கின்றது. நாம் எதிர்கால இறையாட்சியை நம்பியிருந்தாலும், இறைவனின் முழுமையான திருவுளத்திற்கு இவ்வுலகம் இன்னும் ஆட்கொள்ளப்படாத சூழலில் நாம் வாழ்வதால் நம்முடைய நடைமுறை மற்றும் அவசர தேவைக்களுக்காக செபிக்க வேண்டியிருக்கிறது.