Arulvakku

13.03.2019 — Be attuned to respond

*1st week in Lent, Wednesday – 13th March 2019 — Gospel: Lk 11,29-32*
*Be attuned to Respond *
To those demanding a sign from Jesus, he refuses to work any sign concretely, except to quote from the Scriptures. Prophet Jonah was a sign to the people of Nineveh because he preached God’s word to them, in the same way, Jesus is a sign to the present generation because he proclaims the Word of God to them. Likewise, the Queen of Sheba travelled to King Solomon to hear God’s wisdom spoken from him. The people of Nineveh responded with repentance to the word spoken by Jonah (Jonah 3,5), and the queen responded with praise to the God of Israel for the wisdom spoken through Solomon (1 Kings 10,9). These Gentiles responded so favourably to Jonah and Solomon; they show themselves more receptive to God’s revelation than the present generation of Israelites. Jesus is ‘doubly greater’ – greater than Jonah and Solomon; that means he is the greatest, because he is God’s Word made flesh and is also a personification of God’s wisdom. Therefore the crowd should certainly respond to the Word and Wisdom of God spoken in and through Jesus, his son by their whole-hearted acceptance and through repentance.
இயேசுவிடம் உரிமையோடு செயல்முறை அடையாளத்தைக் கேட்கிறவர்களுக்கு மறுப்பு தெரிவித்ததோடு, இறைவார்த்தையில் உள்ள அடையாளங்களையே மேற்கோள்காட்டுகின்றார். இறைவாக்கினர் யோனா நினிவே மக்களுக்கு இறைவார்த்தையை போதித்து அடையாளமாய்த் திகழ்ந்தார்; அவ்வாறே, இயேசுவும் இக்கால சந்ததியினருக்கு இறைவார்த்தையை அறிவித்து அடையாளமாகத் திகழ்கிறார். அதே போன்று, அரசன் சாலமோனின் இறைஞானத்தைக் கேட்டறிய தென்னாட்டு அரசி சேபா உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தார். அடையாளங்களை அறிந்து கொண்டவர்களின் பதில்மொழியே சிறப்பானது. நினிவே நகர மக்கள் யோனாவின் இறைவாக்கிற்கு பதில்மொழியாக மனமாறினார்கள்; மற்றும் சாலமோனின் ஞானத்திற்காக இஸ்ரயேலின் கடவுளைப் போற்றும் பதிலை அரசி தந்தார். இந்த பிறஇனத்தவர்களின் பதில்மொழி யோனாவிற்கும் சாலமோனுக்கும் சாதகமாய் அமைந்திருந்தது. இன்றைய இஸ்ரயேலின் தலைமுறையினரைவிட இம்மக்கள் இறைவெளிப்பாட்டினை முழுமையாக ஏற்றுக் கொண்டார்கள். இயேசு இருமடங்கு பெரியவர் – யோனா மற்றும் சாலமோனைவிடப் பெரியவர். அவர் மிகப்பெரியவர், காரணம் அவர் வார்த்தை மனுவுருமான இறைவன், மற்றும் இறைஞானத்தின் இருப்பிடம். எனவே, மக்கள் இறைவனின் வார்த்தையும் ஞானமும் வெளிப்படும் இயேசுவிற்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும். அவரை முழுஇதயத்தோடு ஏற்றுக்கொண்டு, மனந்திரும்புதலால் நிச்சயமாய் பிரதிபலிக்கவும் வேண்டும்.